கடற்படைத் தளபதி கொழும்பு பேராயர் அதி மேதகு மெல்கம் கார்தினல் ரஞ்சித் அருட்தந்தையை சந்தித்தார்

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன இலங்கை கடற்படையின் 24 வது தளபதியாக நியமிக்கப்பட்ட பின் கொழும்பு பேராயர் அதி மேதகு மெல்கம் கார்தினல் ரஞ்சித் அருட்தந்தையை இன்று (2020 ஆகஸ்ட் 21) கொழும்பிலுள்ள அவருடைய உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்து கடற்படையின் எதிர்கால பணிகளுக்கு ஆசீர்வாதங்களைப் பெற்றார்.

இங்கு இவர்கள் இடையில் சிநேகபூர்வ கலந்துரையாடலொன்று இடம்பெற்றதுடன் அதன் பிரகு அருட்தந்தை கடற்படை தளபதி உட்பட அனைத்து கடற்படையினருக்கும் தனது ஆசீர்வாத்த்தை அளித்தார். இச் சந்திப்பு நினைவு கூறும் வகையில் கடற்படை தளபதியவர்களினால் கார்தினல் ரஞ்சித் அருட்தந்தைக்கு நினைவுச் சின்னமும் வழங்கப்பட்டன.