வட மத்திய கடற்படை கட்டளையில் புதிதாக கட்டப்பட்ட மத்திய யன்மார் பட்டறை திறக்கப்பட்டன

வட மத்திய கடற்படை கட்டளையில் புதிதாக கட்டப்பட்ட யன்மார் முதன்மை இயந்திர பழுதுபார்க்கும் பட்டறை 2020 ஆகஸ்ட் 18 அன்று இலங்கை கடற்படை கப்பல் பண்டுகாபயவில் வட மத்திய கடற்படை கட்டளைத் தளபதியால் திறந்து வைக்கப்பட்டது.

வட மத்திய கடற்படை கட்டளையின் சிவில் பொறியியல் துறை மற்றும் கமடோர் பொறியியல் துறையின் உதவியுடன் கட்டப்பட்ட இந்த மத்திய யன்மார் இயந்திர பழுதுபார்க்கும் பட்டறை மூலம் கடற்படையின் யன்மார் முதன்மைக் கப்பல்களின் முக்கிய இயந்திரங்களை பழுதுபார்க்கப்படுகிறது. மேலும், இலங்கை கடற்படை கப்பல் பண்டுகாபயவின் புதுப்பிக்கப்பட்ட புதிய பாதுகாப்பு அலுவலகமும் அதே தினம் திறக்கப்பட்டது.

திறப்பு விழாவில் வட மத்திய கடற்படை கட்டளைத் துணைத் தளபதி, கட்டளைத் துறைத் தலைவர்கள், இலங்கை கடற்படை கப்பல் பண்டுகாபயவின் கட்டளை அதிகாரி மற்றும் பிற அதிகாரிகள் மற்றும் மாலுமிகள் கலந்து கொண்டனர்.