வடக்கு மற்றும் தெற்கு கடற்கரைகள் கடற்படையின் பங்களிப்பால் சுத்தம் செய்யப்பட்டன

தீவைச் சுற்றியுள்ள கரையோரப் பகுதியை மாசு இல்லாத மண்டலமாக பராமரிக்க கடற்படை பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் படி வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் கடற்கரைகளை கடந்த வாரம் கடற்படையினரால் சுத்தம் செய்யப்பட்டன.

அதன் படி, வடக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் நீலக்காடு கல்முனை துடுவ, மான்கும்கான், ஒத்தப்பனை, கடைகாடு, பெருமுகாடு, சம்பிலிதுரை மற்றும் காங்கேசந்துரை துறைமுகம் ஆகிய கடற்கரை பகுதிகளை சுத்தம் செய்தனர். இதேபோன்று தெற்கு கடற்படை கட்டளையின் கடற்படை வீரர்களும் காலி கோட்டை, தங்காலை கொயம்பொக்க மற்றும் ஹம்பாந்தோட்டை மீன்பிடி துறைமுக கடற்கரை பகுதிகள் சுத்தம் செய்ய நடவடிக்கை எடுத்தனர்.

மேலும், கோவிட் -19 தொற்றுநோய் பரவாமல் தடுக்க வழங்கப்பட்ட அனைத்து சுகாதார நடைமுறைகளுக்கும் ஏற்ப கரையோர தூய்மைப்படுத்தும் திட்டங்கள் நடத்தப்பட்டன, மேலும் கடலோர சுற்றுச்சூழல் அமைப்பைப் பாதுகாக்க கடற்படை இதுபோன்ற சூழல் நட்பு திட்டங்களை தொடர்ந்து மேற்கொள்ளும்.