சாதாரண தரப் பரீட்சையில் சிறந்து விளங்கிய குழந்தைகளுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டது

2019 சாதாரண தரப் பரீட்சையில் சிறந்து விளங்கிய கடற்படைப் பணியாளர்களின் குழந்தைகளுக்கான கடற்படை உதவித்தொகை விருது வழங்கும் விழா 2020 செப்டம்பர் 04 ஆம் திகதி கடற்படைத் தலைமையகத்தின் அட்மிரல் சோமதிலக திசானநாயக்க ஆடிட்டோரியத்தில் பணிப்பாளர் நாயகம் பயிற்சியின் தலைமையில் நடைபெற்றது.

இந்த உதவித்தொகை திட்டம் கடற்படையின் நல நிதியத்தின் பங்களிப்புடன் செயல்படுத்தப்படுகிறது. இந்த விழாவில் 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற சாதாரண தரப் பரீட்சையில் 09 ‘ஏ’ பெற்ற 32 கடற்படை பணியாளர்களின் குழந்தைகளுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டது. இந்த உதவித்தொகைக்கு தகுதியானவர்களுக்கு 2022 ஆகஸ்ட் வரை 02 வருட காலத்திற்கு ஒவ்வொரு மாதமும் 5000.00 ரூபாய் வழங்கப்படும். இதற்கிடையில், இந்த விழாவில் உதவித்தொகை பெறுபவர்களுக்கு அடையாளமாக ரூ. 5000.00 பணம் அட்டை வழங்கப்பட்டது.

செயல் பணிப்பாளர் நாயகம் சேவைகள் மேற்பார்வையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மூத்த மற்றும் இளைய அதிகாரிகள், மூத்த மற்றும் இளைய மாலுமிகள், உதவித்தொகை பெறுபவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் கலந்து கொண்டனர்.