யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை தீவில் இடம்பெற்ற மரம் நடும் திட்டத்திற்கு கடற்படை பங்களித்தது

யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை மாவட்ட நீதிபதி ஏற்பாடு செய்த மரம் நடும் திட்டமொன்று 2020 செப்டம்பர் 05 அன்று வடக்கு கடற்படை கட்டளையின் உதவியுடன் ஊர்காவற்துறை அலம்பிட்டி பகுதியில் நடைபெற்றது.

வடக்கு மாகாணத்தில் பசுமை சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்கும் நோக்கத்துடன் யாழ்ப்பாண தீபகற்பத்தில் அரசு நிறுவனங்களின் பங்கேற்புடன் நடத்தப்பட்ட தொடர்ச்சியான சுற்றுச்சூழல் திட்டங்களின் ஒரு பகுதியாக இந்த மரம் நடும் திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. கடற்படையின் துணைத் தலைமைத் தளபதி மற்றும் வடக்கு கடற்படை கட்டளையின் தளபதி, வடக்கு கடற்படை கட்டளையின் மூத்த மற்றும் இளைய அதிகாரிகள், மாலுமிகள், இராணுவம் மற்றும் காவல்துறை பணியாளர்கள் ஆகியோரின் பங்களிப்புடன் ஆலம்பிடி பகுதியில் 1000 கும்புக் மற்றும் கரந்த தாவரங்கள் நடப்பட்டன.