கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி இந்திய கடலோர காவல்படையின் 'சுஜே' மற்றும் 'சமுத்ர பெஹேரிதார்' கப்பல்களை கண்காணித்தார்

கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி, இந்திய கடலோரக் காவல்படையின் 'சுஜே'(ICGS Sujay) மற்றும் 'சமுத்ர பெஹேரிதார்'(ICGS Samudra Paheredar) கப்பல்களின் கட்டளை அதிகாரிகளை திருகோணமலையில் சந்தித்து ‘எம்டி நியூ டயமண்ட்’ கப்பலின் பேரழிவு நிலைமையை நிர்வகிப்பதில் அவர்கள் அளித்த விதிவிலக்கான ஒத்துழைப்புக்கு தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.

இந்திய கடலோரக் காவல்படையின் 'சுஜே' மற்றும் 'சமுத்ர பெஹேரிதார்' கப்பல்கள் கடந்த செப்டம்பர் 4 மற்றும் 6 ஆம் திகதிகளில் பாதிக்கப்பட்ட கப்பல் இருந்த கடல் பகுதிக்கு சென்று தீயைக் கட்டுப்படுத்த உதவிகளை வழங்கின. குறித்த கப்பல்கள் அவற்றின் விநியோகத் தேவைகளுக்காக திருகோணமலை துறைமுகத்திற்கு வந்தபோது, கிழக்கு கடற்படைத் தளபதி கப்பல்களின் கட்டளை அதிகாரி உட்பட கடற்படையினர்களைச் சந்தித்து, 'நியூ டயமண்ட்' கப்பலின் தீயணைப்பு நடவடிக்கைக்கு வழங்கிய பாராட்டத்தக்க பங்களிப்புக்கு நன்றி தெரிவித்தார்.

இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் இந்திய கடலோர காவல்படையின் 'சுஜே' மற்றும் 'சமுத்ரா பெஹரிடர்' கப்பல்களின் கட்டளை அதிகாரிகள் மற்றும் கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதி ஆகியோருக்கும் இடையே நினைவு சின்னங்கள் பரிமாறப்பட்டன.