இலங்கைக்கான ஆப்கானிஸ்தான் தூதர் அதிமேதகு எம். அஷ்ரப் ஹைதாரி (M Ashraf Haidari) கடற்படை தளபதியை சந்திப்பு

இலங்கைக்கான ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் தூதர் அதிமேதகு எம். அஷ்ரப் ஹைதாரி (M Ashraf Haidari) இன்று (2020 செப்டெம்பர் 16) கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகெத்தேன்னவை சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது, ஆப்கானிஸ்தான் தூதர் இலங்கை கடற்படையின் 24 வது தளபதியாக நியமிக்கப்பட்ட கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும், ஆப்கானிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நட்பு உறவுகள் உட்பட இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்கள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டன.

இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் கடற்படைத் தளபதியும் ஆப்கானிஸ்தான் தூதரும் நினைவுச் சின்னங்களை பரிமாறிக்கொண்டனர்.