கொழும்பு ராயல் கல்லூரி கடற்படை தளபதிக்கு மரியாதை செலுத்தியது

கொழும்பு, ராயல் கல்லூரியின் புகழ்பெற்ற முன்னாள் மாணவரான வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன கடற்படையின் 24 வது தளபதியாக நியமிக்கப்பட்டதன் பேரில் மரியாதை செலுத்தும் விழா இன்று (2020 செப்டம்பர் 18) கொழும்பு ராயல் கல்லூரியில் நடைபெற்றது.

கொழும்பு, ராயல் கல்லூரிக்கு வருகை தந்த கடற்படைத் தளபதி, அவரது மனைவியான திருமதி சந்திமா உலுகேதென்ன மற்றும் அவரது மகளை குறித்த கல்லூரியின் முன்னாள் மாணவர்கள், முதல்வர் மற்றும் கல்லூரியின் பணியாளர்கள் ஆகியோர் அன்புடன் வரவேற்றனர்.

கல்லூரியின் மேற்கத்திய இசை குழுவின் வண்ணமயமான ஊர்வலத்தால் அவர் ராயல் கல்லூரிக்கு அழைத்துச் செல்லப்பட்டார், பின்னர் ராயல் கல்லூரி கேடட் குழுவினரால் கடற்படைத் தளபதிக்கு ஒரு கேடட் மரியாதை தெரிவிக்கப்பட்டன. கடற்படைத் தளபதி ராயல் கல்லூரி போர் வீரர்கள்கள் நினைவுச் சின்னத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தி ராயல் கல்லூரி நினைவு புத்தகத்தில் ஒரு குறிப்பை வெளியிட்டார். ராயல் கல்லூரியின் கேடட் அறைக்குள் சென்ற கடற்படைத் தளபதி அங்கு தனது பழைய நினைவுகளை புதுப்பித்தார்.

கூட்டத்தில் உரையாற்றிய ராயல் கல்லூரியின் முதல்வர், வருகை தந்த கடற்படைத் தளபதிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்தார். ராயல் கல்லூரியின் மற்றொரு பெருமை வாய்ந்த உறுப்பினரை இலங்கை கடற்படையின் 24 வது தளபதியாக நியமித்ததில் தாம் மிகவும் பெருமைப்படுவதாகவும், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன ராயல் மாணவர்களுக்கு ஒரு தனித்துவமான முன்மாதிரியாக அறிமுகப்படுத்தப்படலாம் என்றும் கூறினார்.

இந்த நிகழ்வில் கடற்படை தளபதியின் பாடசாலை நாட்கள் குறித்து கடற்படைத் தளபதியின் சமகாலத்தவரும் கேடட் பிரிவின் உறுப்பினருமான திரு ஜனக் வீரக்கோடி கருத்து தெரிவித்துடன் கடற்படையின் முன்னாள் தளபதியும், பழைய ராயல் கேடட் சங்கத்தின் தலைவருமான அட்மிரல் (ஓய்வு) திசர சமரசிங்க அவரது கடற்படை வாழ்க்கையைப் பற்றி பேசினார்.

இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய கடற்படைத் தளபதி, இந்த நிகழ்வை ஏற்பாடு செய்த பழைய ராயல் கேடட் அமைப்புக்கு நன்றி தெரிவித்ததோடு, இலங்கை கடற்படையின் 24 வது கடற்படை தளபதியாக ராயல் கல்லூரிக்குத் மீண்டும் வர கிடைத்ததும் ராயல் கல்லுரியின் முன்னால் முப்படை தனபதிகள் சங்கத்தின் உறுப்பினராக இருப்பது குறித்தும் மகிழ்ச்சி அடைவதாக கூறினார்.

ராயல் கல்லூரியில் தனது பாடசாலை நாட்களை நினைவுகூரிய கடற்படைத் தளபதி, ராயல் கல்லூரியை அமைதியிலும் சமத்துவத்திலும் வாழ்வதற்கும் மதிப்பு முறைகளை கூர்மைப்படுத்துவதற்கும் சிறந்த பாடங்களைக் கற்பிப்பதற்கும் இணையற்ற இடமாக விவரிக்க முடியும் என்றார். ராயல் கல்லூரியின் புகழ்பெற்ற பழைய மாணவரான கடற்படைத் தளபதி மேலும் ஒழுக்கம், பொறுமை, அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பு ஆகியவற்றின் மூலம் ஆளுமை மேம்பாடு செய்யப்பட வேண்டும் என்று கூறினார். மேலும் புதிய தொழில்நுட்பத்திற்கு அடிமையாகக்கூடாது என்றும் போதைப்பொருட்களுக்கு ஆளாகக்கூடாது என்றும் அவர் மானவர்களிடம் கேட்டுக்கொண்டார்.

தனது பாடசாலை நாட்களில் கேடட் ஆசிரியராக பணியாற்றிய திரு. எம்.என்.தமரத்ன அவர்கள் மற்றும் முதல் ஆண்டு வகுப்பு ஆசிரியராக இருந்த திருமதி சுகதபால ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் உட்பட ஆசிரியர்கள் , முன்னாள் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள், ராயல் கல்லூரியின் முன்னாள் ஆயுதப்படைத் தலைவர்கள், ஆயுதப்படைகளின் தற்போதைய உறுப்பினர்கள், காவல்துறையினர் மற்றும் ராயல் கல்லூரியின் மாணவர்கள் உட்பட ஏராளமான ஆசிரிய பலர் கலந்து கொண்டனர்.