“சர்வதேச கடற்கரை தூய்மைப்படுத்தும் தினம் மற்றும் தேசிய கடல் வள பாதுகாப்பு வாரம் – 2020” தொடக்க விழாவில் கடற்படைத் தளபதி பங்கேற்பு

கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையம் (MEPA) ஏற்பாடு செய்த “சர்வதேச கடற்கரை தூய்மைப்படுத்தும் தினம் மற்றும் தேசிய கடல் வள பாதுகாப்பு வாரம் – 2020” இன் தொடக்க விழா, இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் கீழ் இன்று (19) கல்கிஸ்ஸ கடற்கரையில் நடைபெற்றதுடன் இந்த நிகழ்வில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவும் கலந்து கொண்டார்.

கடலோர மற்றும் கடல் வளங்களின் மதிப்பை அங்கீகரிப்பதக்கும், கடற்கரைகளை சுத்தம் செய்ய சமூக பங்களிப்பைப் பெறுவதக்கும் பொது மக்களின் மனோபாவ விழிப்புணர்வை உருவாக்கும் நோக்கில் சர்வதேச கடற்கரை தூய்மைப்படுத்தும் தினம் மற்றும் தேசிய கடல் வள பாதுகாப்பு வாரம் முன்னிட்டு கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையம் ஏற்பாடு செய்த தொடர் நிகழ்வுகளின் தொடக்க விழா இன்று (செப்டம்பர் 19, 2020) கல்கிஸ்ஸ கடற்கரையில் நடைபெற்றது.

அரசாங்க மற்றும் அரசு சாரா அமைப்புகளின் பங்களிப்புடன் இயக்கப்படும் இந்த திட்டத்தின் தொடக்க விழாவில் கௌரவ பிரதமர், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், முப்படையின் தளபதிகள், பொது நிறுவனங்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் அதிகாரிகள் கழந்து கொண்டனர். இதற்கிடையில், தொடக்க நிகழ்ச்சிக்கு இணையாக ஏற்பாடு செய்யப்பட்ட கடற்கரை தூய்மைப்படுத்தும் பணியில் கடற்படை வீரர்கள் ஒரு குழு பங்கேற்றது.