ரியர் அட்மிரல் கபில சமரவீர கடற்படையின் தலைமை அதிகாரியாக கடமைகளை ஏற்றுக்கொண்டார்

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் தலைவரும், ஆயுதப்படைகளின் தலைவருமான அதிமேதகு கோட்டபய ராஜபக்ஷ அவர்கள் ரியர் அட்மிரல் கபில சமரவீரவை இலங்கை கடற்படையின் தலைமை அதிகாரியாக 2020 செப்டம்பர் 12 ஆம் திகதி முதல் அமல்படுத்தினார்.

அதன்படி, கடற்படையின் புதிய தலைமை அதிகாரி, ரியர் அட்மிரல் கபில சமரவீர இன்று (2020 செப்டம்பர் 20) காலை கடற்படை தலைமையகத்தில் இடம்பெற்ற விழாவின் பின் மதச் சடங்குகளுக்கு முக்கியத்துவம் அளித்து அதிகாரப்பூர்வமாக கடமைகளை ஏற்றுக்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் அவரது அன்பு மனைவி சாந்தனி அத்துகோரல, மகள்களான சேதனி சமரவீர மற்றும் நிருணி சமரவீர மற்றும் அன்பான தந்தையும் கலந்து கொண்டனர்.