ஜப்பானிய சுய பாதுகாப்பு கடற்படை பிரிவின் இரண்டு (02) கப்பல்கள் கொழும்பு துறைமுகத்துக்கு வருகை

ஜப்பானிய சுய பாதுகாப்பு கடற்படை பிரிவின் " காகா" மற்றும் “இகசுசி” எனும் கப்பல்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டு இன்று (2020 செப்டம்பர் 20) கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்தது.

இவ்வாரு கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்த “காகா” கப்பல் 248 மீட்டர் நீளமான பல்பணி டிஸ்டோயர் வகைப்பாட்டைச் சேர்ந்த ஒரு கப்பலாகும். இது 380 கடற்படை வீரர்கள் பயணம் செய்யும் வசதிகளை கொண்டுள்ளது. “இகசுசி” கப்பல் 151 மீட்டர் நீளமான பல்பணி டிஸ்டோயர் வகைப்பாட்டைச் சேர்ந்த ஒரு கப்பலாகும். இது 170 கடற்படை வீரர்கள் பயணம் செய்யும் வசதிகளை கொண்டுள்ளது.

இதற்கிடையில், கடற்படையின் துனை தலைமை அதிகாரியும், மேற்கு கடற்படை கட்டளையின் தளபதியுமான ரியர் அட்மிரல் சுமித் வீரசிங்க மற்றும் ஜப்பானிய சுய பாதுகாப்பு கடற்படை பிரிவின் “காகா” கப்பலின் கொடி அதிகாரி ரியர் அட்மிரல் கொன்னோ யசுசிகே (Konno Yasushige) இடையில் ஒரு சந்திப்பு கப்பல் அருகில் உள்ள படகுத்துறையில் இடம்பெற்றது. இந்த சந்தர்ப்பத்தை குறிக்கும் வகையில் கடற்படை மரபுகளுக்கு இணங்க நினைவுச் சின்னங்களையும் பரிமாறப்பட்டன. இந்த நிகழ்வில் “காகா” மற்றும் “இகசுசி” கப்பல்களின் கட்டளை அதிகாரிகளும் இலங்கை கடற்படை கப்பல் கஜபாஹூவின் கட்டளை அதிகாரியும் கழந்துகொண்டதுடன் அவர்களிடையே நினைவு சின்னங்களும் பரிமாறப்பட்டன. மேலும், குறித்த நிகழ்வுகள் சமூக தூரத்தை பராமரித்து கோவிட் -19 பரவுவதைத் தடுக்கும் தற்போதைய சுகாதார முறைகளுக்கு ஏற்ப நடத்தப்பட்டன.

ஜப்பானிய சுய பாதுகாப்பு கடற்படை பிரிவுக்கு சொந்தமான இந்த கப்பல்கள் 2020 செப்டம்பர் 24 ஆம் திகதி தீவில் இருந்து புறப்பட உள்ளதுடன் அப்போது இலங்கை கடற்படைக் கப்பல்களுடன் கடற்படைப் பயிற்சியை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.