தேசிய கடல் வள பாதுகாப்பு வாரத்துடன் இணைந்து கடற்படையின் தொடர்ச்சியான கடற்கரை தூய்மைப்படுத்தும் திட்டங்கள்

சர்வதேச கடலோர தூய்மை தினத்தை முன்னிட்டு, 'குப்பையற்ற கடல் சுத்தமான கடற்கரை' என்ற கருப்பொருளின் கீழ் இடம்பெற்ற தேசிய கடல் வள பாதுகாப்பு வாரத்துக்கு இனையாக இலங்கை கடற்படை தீவைச் சுற்றியுள்ள கடற்கரைகளில் பல தூய்மைப்படுத்தும் திட்டங்களை மேற்கொண்டுள்ளது.

கெளரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் 2020 செப்டம்பர் 19 ஆம் திகதி கல்கிஸ்ஸ கடற்கரையில் தொடங்கி 2020 செப்டம்பர் 25 ஆம் திகதி வரை நடைபெற்ற தேசிய கடல்சார் பாதுகாப்பு வாரத்தில் நாடு முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட கடற்கரைகள் சுத்தம் செய்யப்பட்டன. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இந்த நடவடிக்கையில் இணைந்த கடற்படை, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் வழிகாட்டுதலின் பேரில், வடக்கு, கிழக்கு, மேற்கு, தென்கிழக்கு, வட மேற்கு, வட மத்திய மற்றும் தென் கடற்படைக் கட்டளைகளை மையமாகக் கொண்டு தொடர்ச்சியான கடலோர தூய்மைப்படுத்தும் திட்டங்களை நடத்தியது. கடல் சூழலுக்கு எந்தவிதமான சேதமும் ஏற்படாமல் தடுக்க கடற்படை கடற்கரையிலிருந்து பிளாஸ்டிக், பாலிதீன் உள்ளிட்ட பெரிய அளவிலான குப்பைகளை அகற்றியது.

மேலும், கடல் பல்லுயிர் மற்றும் கடல் வளங்களை பாதுகாக்க கடற்படை பல பாதுகாப்பு திட்டங்களை நடத்தி வருகிறது. இந்த திட்டங்களில்; பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் மறுசுழற்சி, சதுப்பு நிலங்களை நடவு செய்தல், பவளங்களை மீண்டும் நடவு செய்தல், மீன்பிடித் தொழிலை ஒழுங்குபடுத்துவதற்காக சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைத் தடுப்பது மற்றும் மீன்பிடி சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துதல் ஆகியவை முக்கியத்துவம் வாய்ந்தது