ரியர் அட்மிரல் சுமித் வீரசிங்க கடற்படையின் துனை தலைமை அதிகாரியாக பொறுப்பேற்றுள்ளார்

2020 செப்டம்பர் 22 ஆம் திகதி இலங்கை கடற்படையின் துனை தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்ட ரியர் அட்மிரல் சுமித் வீரசிங்க இன்று (2020 செப்டம்பர் 29) கடற்படையின் துனை தலைமை அதிகாரியாக அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றுள்ளார்.

அதன்படி, இன்று காலை கடற்படை தலைமையகத்தில் மதச் சடங்குகளுக்கு பின் நடைபெற்ற ஒரு எளிய விழாவுக்குப் பிறகு அவர் புதிய பதவியில் அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றார், இதில் அவரது அன்பு மனைவி திருமதி குமாரி வீரசிங்கவும் கலந்து கொண்டார்.