கடலோர காவல்படையின் பணிப்பாளர் நாயகம் கடற்படை தளபதியை சந்திப்பு

இலங்கை கடலோர காவல்படையின் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் சமந்த விமலதுங்க, குறித்த பதவியில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு இன்று (2020 செப்டம்பர் 29) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவை கடற்படை தலைமையகத்தில் சந்தித்தார்.

கடற்படை தலைமையகத்திற்கு வருகை தந்த ரியர் அட்மிரல் சமந்த விமலதுங்க கடற்படைத் தளபதியை சந்தித்து உரையாடினார். அங்கு ஓய்வு பெற உள்ள இலங்கை கடலோர காவல்படையின் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் சமந்த விமலதுங்கவுக்கு கடற்படைத் தளபதி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் கடற்படைத் தளபதி மற்றும் இலங்கை கடலோர காவல்படையின பணிப்பாளர் நாயகம் ஆகியோரும் நினைவுச் சின்னங்கள் பரிமாறிக்கொண்டனர்.