செனெஹச கல்வி வள ஆராய்ச்சி மற்றும் தகவல் மையத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச சிறுவர் தின கொண்டாட்டங்களில் கடற்படைத் தளபதி பங்கேப்பு

உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு சிறப்புத் தேவைகளைக் கொண்ட குழந்தைகளின் திறமைகளை வெளிப்படுத்த செனெஹச கல்வி வள ஆராய்ச்சி மற்றும் தகவல் மையம் ஏற்பாடு செய்த வருடாந்த நிகழ்வு இன்று (2020 அக்டோபர் 01) அதி மேதகு முதல் பெண்மணி திருமதி அயோமா ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்த சிறப்பு நிகழ்ச்சியில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன மற்றும் கடற்படை சேவா வனிதா பிரிவுத் தளபதி திருமதி சந்திமா உலுகேதென்ன ஆகியோரும் கலந்து கொண்டனர்.

பாதுகாப்புப் படையினர்களுடைய குடும்பங்களில் சிறப்புத் தேவைகளைக் கொண்ட குழந்தைகளைப் பராமரித்தல் மற்றும் அவர்களுக்கு உதவுதல் என்ற முதன்மை நோக்கத்துடன் செனெஹச கல்வி வள ஆராய்ச்சி மற்றும் தகவல் மையம் நிறுவப்பட்டது. மேலும், இது மருத்துவ, சிகிச்சை மற்றும் கல்வி வசதிகளை வழங்குகிறது.

இன்று (அக்டோபர் 01) ஈடுபட்டுள்ள உலக சிறுவர் தினத்தை கொண்டாடும் விதமாக செனெஹச கல்வி வள ஆராய்ச்சி மற்றும் தகவல் மையத்தால் கவனிக்கப்படுகின்ற மற்றும் உதவி செய்யப்படுகின்ற பாதுகாப்புப் படை உறுப்பினர்களுடைய குடும்பங்களில் சிறப்புத் தேவைகளைக் கொண்ட குழந்தைகளின் திறன்கள், திறமைகள் ஆகியவற்றைக் அதி மேதகு முதல் பெண்மணி திருமதி அயோமா ராஜபக்ஷ முன் வெளிப்படுத்தினர். நாராஹேன்பிட உள்ள மையத்தின் ஆடிட்டோரியத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சிறப்புத் தேவைகளைக் கொண்ட மொத்தம் 138 குழந்தைகள் பங்கேற்றனர், விழாவின் முடிவில், அந்த குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வுக்காக முப்படை தளபதிகள், ஆயுத சேவைகளின் மூத்த அதிகாரிகள் மற்றும் இந்த குழந்தைகளின் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.