சர்வதேச சிறுவர் தினம் மற்றும் லேடி றிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் 125 வது ஆண்டு நிறைவுக்கு இனையாக கெளரவ பிரதமர் தலைமையில் இடம்பெற்ற விழாவில் கடற்படைத் தளபதி பங்கேற்பு

சர்வதேச சிறுவர் தினம் மற்றும் லேடி றிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் 125 வது ஆண்டு நிறைவுக்கு இனையாக கெளரவ பிரதமர் தலைமையில் இன்று (2020 அக்டோபர் 01) குறித்த வைத்தியசாலையில் நடைபெற்ற விழாவில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன பங்கேற்றார்.

இங்கு இளம் குழந்தைகளுக்கான நோயாளி பராமரிப்பு சேவைகள் விரிவுபடுத்துவதற்காக கடற்படையின் பங்களிப்புடன் கட்டப்படும் ஒன்பது மாடி தீவிர சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை வார்டு வளாகத்திற்கான அடிக்கல் நாட்டல் மற்றும் புதிதாக கட்டப்பட்ட எலும்பு மஜ்ஜை மாற்று பிரிவு மற்றும் புதிய சத்திர சிகிச்சை அரை கெளரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் இன்று திறந்து வைக்கப்பட்டன.

லேடி றிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக இலங்கை கடற்படை ஏற்கனவே பல திட்டங்களைத் தொடங்கியுள்ளதுடன், 12 மாடி இருதய மற்றும் தோள்பட்டை தீவிர சிகிச்சை வார்டு வளாகத்தின் கட்டுமானமும் கடற்படையால் இயக்கப்பட்ட மனிதவளத்துடன் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடற்படை அதன் இரண்டாம் கட்டமாக 2021 ஆம் ஆண்டில் மற்றொரு நான்கு மாடி வார்டு வளாகத்தை நிர்மாணிக்க உள்ளது. தற்போது, 03 கடற்படை சிவில் பொறியாளர் அதிகாரிகளுடன் சிவில் பொறியாளர் மற்றும் மின் துறைகளைச் சேர்ந்த 235 கடற்படை வீரர்கள் அடங்கிய குழு இந்த கட்டுமானத் திட்டத்திற்காக பங்களிப்பு வழங்குகின்றனர். மேலும், கோவிட் -19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்த மருத்துவமனை வளாகத்தில் கடற்படை பல புனரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

இந் நிகழ்ச்சியில் கெளரவ பிரதமரின் மனைவி திருமதி ஷிரந்தி ராஜபக்ஷ அவர்கள், சுகாதார அமைச்சர் கெளரவ வழக்கறிஞர் பவித்ராதேவி வன்னியராச்சி அவர்கள் உட்பட மக்கள் பிரதிநிதிகள் லேடி றிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் சுகாதார அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.