இலங்கை கடற்படை கப்பல் 'மஹவெலி' நிறுவனம் தனது 13 வது ஆண்டு நிறைவை பெருமையுடன் கொண்டாடியது.

கிழக்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் ‘மஹவெலி’ நிறுவனத்தின் 13 வது ஆண்டு நிறைவை 2020 அக்டோபர் 01 ஆம் திகதி பெருமையுடன் கொண்டாடப்பட்டது.

இலங்கை கடற்படை கப்பல் மஹவெலி நிறுவனத்தின் 13 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, நிறுவனத்தின் கட்டளை அதிகாரி உட்பட கடற்படையினர் கடற்படை மரபுகள் மற்றும் மத அனுசரிப்புகளுக்கு முன்னுரிமை அளித்து, ஆண்டு நிறைவை பிரமாண்டமாக கொண்டாட நடவடிக்கை எடுத்திருந்தனர். அதன்படி, கட்டளை அதிகாரி கடற்படை மரபுக்கு ஏற்ப பிரிவுகள் ஆய்வு செய்த பின் கப்பல் குழுவினரை உரையாற்றினார். மேலும், கடற்படை பழக்கவழக்கங்களின்படி, ஒரு ஆடம்பரமான ‘பராகானா’ (பாரம்பரிய உணவு) விருந்து நடைபெற்றது.

மேலும், இந்த ஆண்டு நிறைவுக்கு இனையாக இலங்கை கடற்படை கப்பல் மஹாவெலி நிருவனத்தில் இரவு முழுவதும் பிரித் பாராயணம் மற்றும் தானம் வழங்கும் நிகழ்வுகள் நடைபெற்றது.