படைவீரர்களின் குடும்ப உறுப்பினர்களுக்காக ரணவீரு சேவா அதிகார சபையால் ஏற்பாடு செய்த நடமாடும் சேவை வெற்றிகரமாக நிறைவடைந்தது

முப்படைகள்,பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் சேவையில் ஈடுபட்ட சமயம் உயிர்நீர்த்த, அங்கவீனமுற்ற மற்றும் ஓய்வுபெற்ற படைவீரர்களின் குடும்ப உறுப்பினர்களின் நலன்புரி நடவடிக்கைகளை கருத்திக்கொண்டு ரணவிரு சேவை அதிகார சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நடமாடும் சேவை 2020 ஒக்டோபர் மாதம் 03 திகதி காலை 0800 மணி முதல் மாலை 0500 மணி வரை பாதுகாப்பு செயளாலர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன அவர்களின் தலைமையில் சாலியபுர கஜபா ரெஜிமன்ட் தலைமையகத்தில் நடைபெற்றது.

இந்த நடமாடும் சேவையின் போது இறந்த மற்றும் காணாமல் போன போர்வீரர்களின் உறவினர்களுக்கு தங்கள் குழந்தைகள், கணவர்கள் அல்லது சகோதரர்கள் நாட்டிற்கு செய்த விலைமதிப்பற்ற சேவையைப் பாராட்டும் விதமாக பாதுகாப்பு செயலாளர், ஆயுதப்படைகளின் தளபதிகள் மற்றும் செயல் பொலிஸ் மா அதிபர் ஆகியோரால் 'உத்தம பிரனாம பதக்கம்' வழங்கப்பட்டது. மேலும், நாட்டிற்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்த அனுராதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த எட்டு (08) கடற்படை விர்ர்களின் உறவினர்களுக்கு கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன, பதக்கங்களை வழங்கினார்.

அதன்படி, மறைந்த லெப்டினன்ட் கமாண்டர் ஆர்.எம்.டி.எச்.எஸ். ரத்நாயக்க, கடற்படை வீர்ர் எச்.ஜி.டபிள்யூ.கே. பிரேமலால், கடற்படை வீர்ர் டி.எம்.எஸ்.பி தஹநாயக்க, கடற்படை வீர்ர் என்.என். ராஜபக்ஷ, கடற்படை வீர்ர் என்.எம்.டபிள்யூ.எஸ். கருநாத்திலக, கடற்படை வீர்ர் ஆர்.யூ.எஸ் சமந்த குமார, கடற்படை வீர்ர் ஜீ.சி குனசேகர மற்றும் கடற்படை விர்ர் ஜே.டீ ஜயதிலக என்ற 08 வீர்ர்களுக்கு சொந்தமான உத்தம பிரனாம பதக்கம் கடற்படைத் தளபதி அவர்களின் உறவினர்களுக்கு வழங்கினார். மேலும், நாட்டிற்காக உயிரை தியாகம் செய்த அனுராதபுரம் மாவட்டத்தில் 16 கடற்படை வீர்ர்கள் உட்பட 269 பிற கடற்படை வீரர்களின் நெருங்கிய உறவினர்களுக்கு எதிர்காலத்தில் இந்த பதக்கத்தை வழங்கப்படும்.

மேலும், இந்த நடமாடும் சேவைக்காக கடற்படையில் பணியாற்றும் போது உயிர்நீர்த்த மற்றும் அங்கவீனமுற்ற படைவீரர்களின் குடும்ப உறுப்பினர்களும் ஓய்வுபெற்ற கடற்படை விர்ர்களும் கழந்துகொண்டனர். அங்கு அவர்களின் சம்பளம், ஓய்வூதியம் மற்றும் காப்பீட்டு இழப்பீடு தொடர்பான பிரச்சினைகள் குறித்து கடற்படை கவனம் செலுத்தியது. இது தவிர, போர் வீரர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு பொதுவான சுகாதார பிரச்சினைகள் மற்றும் நலன்புரி விஷயங்களை கவனித்து, அந்த விஷயங்களை தீர்ப்பதற்கு தேவையான வழிமுறைகளை மற்றும் ஆலோசனைகளை கடற்படை வழங்கியது.