கொழும்பு கோட்டை பிரதான பேருந்து நிலையம் மையப்படுத்தி கடற்படையால் கிருமி நீக்கும் திட்டமொன்று செயல்படுத்தப்பட்டன

பொதுமக்களிடையே கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக இலங்கை கடற்படை இன்று (2020 அக்டோபர் 07) கொழும்பு கோட்டை பிரதான பேருந்து நிலையம் மையப்படுத்தி கிருமி நீக்கும் திட்டமொன்று செயல்படுத்தியது.

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் அறிவுறுத்தலின் பேரில், இலங்கை கடற்படையின் வேதியியல், உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி (Chemical, Biological, Radiological and Nuclear) அவசரகால பதிலளிப்பு பிரிவினால் தினசரி பொதுமக்கள் வருகை தரும் கொழும்பு கோட்டை பிரதான பேருந்து நிலையத்தில் அனைத்து இடங்களையும் முறையாக கிருமி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

எதிர்காலத்திலும் வைரஸ் பரவுவதைத் தடுக்க இது போன்ற பொது இடங்கள் மையமாகக் கொண்டு பல கிருமி நீக்கும் திட்டங்களை செயல்படுத்த கடற்படை திட்டமிட்டுள்ளது.