வடக்கு மற்றும் தெற்கு கடற்கரைகள் கடற்படையின் பங்களிப்பால் சுத்தம் செய்யப்பட்டன

தீவைச் சுற்றியுள்ள கரையோரப் பகுதியை மாசு இல்லாத மண்டலமாக பராமரிக்க கடற்படை பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் படி 2020 அக்டோபர் 03 மற்றும் 04 திகதிகளில் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் உள்ள கடற்கரைகளை கடற்படையினரால் சுத்தம் செய்யப்பட்டன.

இதன் கீழ், வடக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் காங்கேசந்துரை துறைமுக பகுதி கடற்கரை, மான்கும்பான் கடற்கரை, மாவெலிதுரை கடற்கரை, கோவிலன் கடற்கரை, மன்னடி கடற்கரை, வெத்தலகேனி மற்றும் குசுமன்துரை கடற்கரை பகுதிகளை சுத்தம் செய்தனர். இதேபோன்று தெற்கு கடற்படை கட்டளையின் கடற்படை வீரர்களும் காலி ஜாகொடுவெல்ல கடற்கரை, தங்காலை பரைவெல்ல கடற்கரை மற்றும் ஹம்பாந்தோட்டை நகர பகுதி கடற்கரை பகுதிகள் சுத்தம் செய்ய நடவடிக்கை எடுத்தனர்.

கடற்படையின் இந்த கடலோர தூய்மைப்படுத்தும் நடவடிக்கைகள் மூலம் கரையிலிருந்து பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் உள்ளிட்ட பெரிய அளவிலான குப்பைகளை அகற்றப்பட்டன. மேலும், இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்ற கடற்படையினர்கள் கோவிட் 19 பரவுவதைத் தடுப்பதற்காக வழங்கப்பட்ட சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றினர்.