கப்பல்களுக்கு அணுகல்,சோதனை செய்தல் மற்றும் கைது செய்தல் குறித்த பயிற்றுவிப்பாளர் பாடநெறி திட்டம் திருகோணமலையில் நிறைவடைந்தது

போதைப்பொருள் மற்றும் குற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் அலுவலகத்துடன் இணைந்து இலங்கையின் சட்ட அமலாக்க நிறுவனங்களில் நபர்களுக்காக நடத்தப்பட்ட கப்பல்களுக்கு அணுகல், சோதனை செய்தல் மற்றும் கைது செய்தல் குறித்த பயிற்றுவிப்பாளர் பாடநெறி திட்டம் 2020 அக்டோபர் 09 ஆம் திகதி திருகோணமலை சிறப்பு படகு படை தலைமையகத்தில் நிறைவடைந்தது.

ஐக்கிய நாடுகளின் போதைப்பொருள் மற்றும் குற்றம் தொடர்பான அலுவலகத்தின் உலகளாவிய கடல்சார் குற்றத் திட்டத்தின் கீழ் இலங்கை கடற்படையுடன் இணைந்து 2020 செப்டம்பர் 28 ஆம் திகதி நான்காவது முறையாக நடத்தப்பட்ட கப்பல்களுக்கு அணுகல்,சோதனை செய்தல் மற்றும் கைது செய்தல் குறித்த இந்த பயிற்றுவிப்பாளர் பாடநெறி திட்டம் மூலம் கப்பல்களுக்கான அணுகல் நடைமுறைகள் உட்பட போதைப்பொருள் அடையாளம் காணல், கண்டறிதல் நுட்பங்கள் மற்றும் போதைப்பொருள் பரிமாற்றும் முறைகள் குறித்த அறிவை வழங்கப்பட்டது. இரண்டு வாரமாக நடைபெற்ற இந்த பாடத்திட்டத்தில் இலங்கை கடற்படை, இலங்கை கடலோர காவல்படை, இலங்கை காவல்துறை மற்றும் இலங்கை சுங்கத் துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் 30 பயிற்சியாளர்கள் பங்கேற்றனர். இந்த பாடத்திட்டத்தில் இலங்கை காவல்துறை மற்றும் இலங்கை சுங்கத் துறை அதிகாரிகள் பங்கேற்றது இதுவே முதல் முறையாகும்.

பாடநெறி முடிவில் நடைபெற்ற சான்றிதழ் வழங்கும் விழாவுக்காக சிறப்பு படகுப் படையின் பயிற்சி அதிகாரி, போதைப்பொருள் மற்றும் குற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் அலுவலக அதிகாரிகள் மற்றும் சிறப்பு படகுப் படையின் பயிற்றுநர்கள் கலந்து கொண்டனர்.