அனுராதபுரம், எத்தலகல ஆரண்ய சேனாசனத்தில் கடற்படையால் கட்டப்படவுள்ள ஸ்தூபிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது

அனுராதபுரம், மீகலேவ எத்தலகல ஆரண்ய சேனசனத்தில் ஸ்தூபிக்கான அடிக்கல் நாட்டும் விழா 2020 அக்டோபர் 23 ஆம் திகதி வட மத்திய கடற்படை கட்டளை தளபதியின் தலைமையில் நடைபெற்றது. இந்த ஸ்தூபியின் கட்டுமானப் பணிகள் இலங்கை கடற்படையால் மேற்கொள்ளப்படும்.

அனுராதபுரம், மீகலேவ எத்தலகல ஆரண்ய சேனசனத்தில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து மறைந்த டென்மார்க்கின் ஞானதீப தேரரின் அஸ்திகள் வைத்து கட்டப்படுகின்ற இந்த ஸ்தூபியின் கட்டுமானப் பணிகள் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் வழிகாட்டுதலின் கீழ் கடற்படையால் மேற்கொள்ளப்படும். இந்த மாபெரும் செயலின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் அக்டோபர் 23 ம் திகதி மகா சங்கத்தினரின் ஆசீர்வாதங்களுடன் வட மத்திய கடற்படை கட்டளையின் தளபதி ஸ்தூபிக்கு அடிக்கல் நாட்டினார்.

இந்த நிகழ்வில் எத்தலகல ஆரண்ய சேனசனத்தில் மகா சங்கத்தினர், இலங்கை கடற்படை கப்பல் பண்டுகாபய நிருவனத்தின் கட்டளை அதிகாரி, இலங்கை கடற்படை கப்பல் சிக்ஷா நிருவனத்தின் பயிற்சி கேப்டன் மற்றும் வட மத்திய கடற்படை கட்டளையின் சிவில் பொறியியல் துறையைச் சேர்ந்த கடற்படை வீரர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.