கடற்படையின் 70 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு அனுராதபுரத்தில் கொடி ஆசீர்வாதம் பூஜை மற்றும் “கஞ்சுக” பூஜை நடைபெற்றது

2020 டிசம்பர் மாதம் 09 ஆம் திகதிக்கு ஈடுபட்டுள்ள இலங்கை கடற்படையின் 70 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கஞ்சுக பூஜை மற்றும் கடற்படை கொடிகள் ஆசிர்வாதிக்கும் பூஜை இம்முறையும் ஏற்பாடு செய்யப்பட்டன. இந்த விழா 2020 நவம்பர் 12 மற்றும் 13 ஆகிய திகதிகளில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் தலைமையில் ருவன்வேலி மஹா சேய மற்றும் ஜெய ஸ்ரீ மகா போதி ஆகிய இடங்களில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கடற்படை சேவா வனிதா பிரிவின் தளபதி திருமதி சந்திமா உலுகேதென்னவும் கலந்து கொண்டார்.

இலங்கை கடற்படையின் புத்த சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட கஞ்சுக பூஜை நவம்பர் 12 ஆம் திகதி வியாழக்கிழமை ருவன்வெலி சேய முன் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்ட கடற்படைத் தளபதி உட்பட மூத்த அதிகாரிகள் மற்றும் கடற்படை புத்த சங்கத்தின் உறுப்பினர்கள் ஆகியோரால் ருவன்வேலி ஸ்தூபத்தைச் சுற்றி 300 மீட்டர் நீளமுள்ள ஒரு கொடி ஏற்றப்பட்டது. அதன்பிறகு, அவர்கள் பிரிகர மற்றும் பூஜைகள் வழங்குவதன் மூலம் மத சடங்குகளைச் செய்தனர்.

அடுத்த நாள் (நவம்பர் 13) கொடி ஆசீர்வாத விழா ஜெய ஸ்ரீ மகா போதி வளாகத்தில் நடைபெற்றது. இந்த விழாவின் போது, தேசிய கொடி, பௌத்த கொடி உட்பட கடற்படை கட்டளைகளில், நிருவனங்களில் மற்றும் கப்பல்களில் 87 கொடிகளுக்கு ஆசிர்வாதிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சி அனுராதபுரத்தின் அடமஸ்தானதிபதி, வட மத்திய மாகாணத்தின் பிரதான சங்கநாயக்க, கலாநிதி புநித பல்லேகம சிரினிவாசாபிதான தேரர் உட்பட மஹா சங்கத்தேரர்களுடைய தலைமையில் இடம்பெற்றது. மூன்று தசாப்த கால பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவருவதில் கடற்படையின் குறிப்பிடத்தக்க பங்கை வணக்கத்திற்குரிய மகா சங்கத்தினர் பாராட்டியதுடன், போரில் உயிர் இழந்த, காணாமல் போன மற்றும் காயமடைந்த அனைத்து வீர்ர்களுக்கும் ஆசிர்வாதிக்கப்பட்டதுடன் தற்போதைய கடற்படைத் தளபதி உட்பட பணியாற்றும் கடற்படை வீர்ர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் ஆசிர்வாதித்தனர். தற்போதய கோவிட் 19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதில் கடற்படை உட்பட முப்படைகள், காவல்துறை மற்றும் சுகாதார சேவைகள் ஆற்றிய குறிப்பிடத்தக்க பங்களிப்பை இங்கு பாராட்டப்பட்டது.

COVID - 19 தொற்றுநோயைத் தடுப்பதற்காக அறிவிக்கப்பட்ட சுகாதார ஆலோசனைகள் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றி நடத்தப்பட்ட இந்த மத நிகழ்ச்சியில் கடற்படைத் துனை தளபதி ரியர் அட்மிரல் கபில சமரவீர மற்றும் அவரது மனைவி, வட மத்திய கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் சஞ்சீவ டயஸ், கடற்படை கட்டளைத் தளபதிகள் மற்றும் கடற்படை இயக்குநர்கள் ஜெனரல்கள் பங்கேற்றனர். மேலும, கடற்படை தலைமையகம் மற்றும் வட மத்திய கடற்படை கட்டளைக்கு இணைக்கப்பட்ட மூத்த மற்றும் இளைய அதிகாரிகள் மற்றும் குறைந்த எண்ணிக்கையிலான மாலுமிகளும் கலந்து கொண்டனர்.