ரஷ்ய கூட்டமைப்பின் மூன்று (03) போர்க்கப்பல்கள் திருகோணமலை துறைமுகத்திற்கு வருகை

ரஷ்ய கூட்டமைப்புக்கு சொந்தமான கார்ட்ஸ் மிசயில் குருசர் வகையில் “வேரியக்” போர் கப்பல்(Guards missile cruiser “Variag”) நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க்கப்பலான “அட்மிரல் பான்டிலீவ்” (Large anti-submarine ship Admiral “panteleeve”) மற்றும் நடுத்தர அளவிலான விநியோக கப்பலான "பெச்செங்கா" ( Medium sea tanker “Pechenga”) ஆகிய கப்பல்கள் இவ்வாரு திருகோணமலை துறைமுகத்திற்கு 2020 நவம்பர் 30 அன்று வந்தடைந்தது.

விநியோக தேவைகள் மற்றும் குழு ஓய்வுக்காக திருகோணமலை துறைமுகத்திற்கு வந்த இந்த போர்க்கப்பல்கள் மற்றும் கப்பல்கள் தொடர்பான நடவடிக்கைகளை தற்போதுள்ள கோவிட் 19 பரவுவதைத் தடுக்கும் சுகாதார வழிகாட்டுதல்கள் மற்றும் முறைகள் படி அதை நோக்கம் கொண்ட செயல்பாடுகளுக்கு மட்டுமே மட்டுப்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும், தீவுக்கு வந்த போர்க்கப்பல்கள் மூன்றும் தீவை விட்டு டிசம்பர் 03 ஆம் திகதி வெளியேறும் போது இலங்கை கடற்படை கப்பல் 'சயுர'வுடன் செயல்பாட்டுப் பயிற்சியில் ஈடுபட உள்ளது.