புதிய பல்நோக்கு ஆழ்கடல் கண்காணிப்பு கப்பல் சேவை வளாகம் திறக்கப்பட்டது

திருகோணமலை கடற்படை கப்பல்துறையில் புதிதாக கட்டப்பட்ட புதிய பல்நோக்கு ஆழ்கடல் கண்காணிப்பு கப்பல் சேவை வளாகம் (AOPV Stores and Workshop Complex) இன்று (2020 டிசம்பர் 12) திருகோணமலை கடற்படை கப்பல்துறையில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவினால் திறந்து வைக்கப்பட்டது.

கடற்படைத் தளபதியின் வழிகாட்டுதல் மற்றும் உத்தரவுகளைத் தொடர்ந்து, குறுகிய காலத்தில் விரைவாக முடிக்கப்பட்ட இந்த சேவை வளாகம், உதிரி பாகங்கள், சேமிப்பு அலகுகள், பொறியியல் ஆணையம், மின், பழுதுபார்த்தல் மற்றும் பல்நோக்கு ஆழ்கடல் கண்காணிப்புக் கப்பல்களுக்கான பராமரிப்பு அலகுகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது, மேலும் அனைத்து சேவைகளையும் ஒரே இடத்தில் செய்ய வல்லது. மேலும் கடல்சார் கண்காணிப்புக் கடமைகளுக்கு திறம்பட பயன்படுத்த முடியும்.

புதிய கட்டடத்தை விரைவாக முடிக்க பங்களித்த மாலுமிகளையும் தளபதி உரையாற்றினார், மேலும் அவர்களுக்கு தனது பாராட்டுகளையும் தெரிவித்தார்.

இந்த நிகழ்வுக்காக கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் ருவன் பெரேரா, பணிப்பாளர் நாயகம் பொறியியல் ரியர் அட்மிரல் ரவி ரணசிங்க, கொடி அதிகாரி கடற்படை வெளியீட்டு கட்டளை, ரியர் அட்மிரல் வய்.எம்.ஜி.பி ஜெயதிலக, கொமடோர் ஆணையம் வழங்கல் மற்றும் சேவைகள் கிழக்கு, கொமடோர் ஆணையம் கப்பல்துறை, கிழக்கு கடற்படை கட்டளையின் துனை தளபதி உட்பட கடற்படை தலைமையகம் மற்றும் கிழக்கு கடற்படை கட்டளைக்கு இணைக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் மாலுமிகளும் கலந்து கொண்டனர்.