கடற்படைத் தளபதி வட மத்திய கடற்படை கட்டளைக்கு விஜயம்

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன 2020 டிசம்பர் 26 மற்றும் 27 ஆகிய திகதிகளில் வட மத்திய கடற்படை கட்டளைக்கு விஜயம் செய்து கட்டளையின் செயல்பாட்டுத் தயார்நிலை, அதன் நிர்வாக செயல்பாடு மற்றும் நலன்புரி வசதிகள் குறித்து ஆய்வு செய்தார்.

இந்த விஜயத்தின் போது, கடற்படைத் தளபதி வட மத்திய கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படைக் கப்பல் சிக்ஷா, பண்டுகாபய, கஜபா, தம்மண்ணா, புவனேக, புஸ்ஸதேவ மற்றும் அதன் துணை நிறுவனங்களை ஆய்வு செய்து செயல்பாட்டு ஏற்பாடுகள், நிர்வாகம் மற்றும் நலன்புரி வசதிகளை கண்காணித்தார். மேலும் கட்டளைக்குள் தற்போது நடைபெற்று வரும் கட்டுமானத் திட்டங்களின் முன்னேற்றங்களை கவனித்து கட்டளையின் கடற்படையினரை உரையாற்றுவதற்கும் நடவடிக்கை எடுத்தார். கடற்படைத் தளபதியாக கடமைகளை ஏற்றுக்கொண்ட பின்னர் வட மத்திய கடற்படை கட்டளைக்கு அவர் மேற்கொண்ட முதல் உத்தியோகபூர்வ விஜயம் இதுவாகும்.

அதே வேளையில், இலங்கை கடற்படை கப்பல் சிக்ஷா நிருவனத்தின் பயிற்சி விஷயங்களில் சிறப்பு கவனம் செலுத்துவதற்கு தனது நேரத்தை ஒதுக்கிக் கொண்ட கடற்படைத் தளபதி கோவிட் -19 தொற்றுநோய் உடன் ஏற்பட்ட புதிய பொதுமைப்படுத்தலின் கீழ் பயிற்சி நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொண்டதை தொடர்பாக வட மத்திய கடற்படை கட்டளையின் தளபதி மற்றும் இலங்கை கடற்படை கப்பல் சிக்ஷா நிருவனத்தின் தளபதி உட்பட ஆலோசனைக் குழுவை பாராட்டினார். மேலும் ஆட்சேர்ப்பு பயிற்சி மற்றும் மேம்பட்ட பயிற்சிகள் மேற்கொள்ளும் போது கடற்படையை முன்னேற்றும் பயிற்சியாளர்களை உருவாக்கத்திற்கு தேவையான உறுதியான அடித்தளத்தை அமைப்பது ஆலோசகர்களின் பொறுப்பு என்பதும் கூறினார்.

கடற்படையின் நிர்வாகத்தை திறம்பட செயல்படுத்த, கடற்படையின் நிர்வாகம் மேலும் பலப்படுத்தப்பட வேண்டும் என்றும், கடற்படையினரின் நிர்வாகம் முறையான முறையில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கடற்படை தளபதி மேலும் தெரிவித்தார். புதிய பொதுமைப்படுத்துதலின் கீழ் கடமைகளைச் செய்வதற்கு, மாலுமிகள் உத்தியோகபூர்வ மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில், சுகாதார ஆலோசனைகள் மற்றும் கொடுக்கப்பட்ட நடைமுறைகளுக்கு ஏற்ப மிகவும் பொறுப்பான முறையில் செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

கடற்படையில் நீண்ட கால பயன்பாட்டிற்குப் பிறகு படிப்படியாக சேவையில் இருந்து நீக்கப்படும் கப்பல்களுக்கு பதிலாக அடுத்த சில ஆண்டுகளில் கடற்படைக்கு பல பெரிய புதிய கப்பல்களைப் பெற எதிர்பார்ப்பதாக கடற்படைத் தளபதி கூறினார். தொழில்நுட்ப ரீதியாக முன்னேறும் கடற்படையின் கப்பல்களில், படகுகளில் மற்றும் நிறுவனங்களில் பணியாற்ற அனைத்து கடற்படையினரும் அறிவாளியாக இருக்க வேண்டும் என்றும் அவர் மேலும் கூறினார்.

கடல் வழியாக போதைப்பொருள் கடத்தல் மற்றும் விநியோகத்தை தடுப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு ஆதரவாக ரோந்துப் பணிகளை நடத்துவதன் மூலம் போதைப்பொருள் கடத்தல்காரர்களைத் தடுப்பதில் கடற்படை முக்கிய பங்கு வகிக்கிறது என்று கடற்படைத் தளபதி தெரிவித்ததுடன் அனைத்து கடற்படையினரும் அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும் என்றும் கூறினார். எந்த வகையான போதைப்பொருள் குற்றத்தைச் செய்யும் கடற்படையினருக்கும் எதிராக கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மேலும் வலியுறுத்தினார்.

நாட்டின் முதல் பாதுகாப்பு வளையமாக விளங்கும் இலங்கை கடற்படையின் கடமைகளையும் பணிகளையும் திறம்பட நிறைவேற்ற உடல் மற்றும் மனரீதியாக பொருத்தமான, வலுவான, தைரியமான, ஆரோக்கியமான கடற்படையினர்கள் தேவை என்றும் அதற்காக ஒவ்வொரு மாலுமியும் உடல் அட்டவணை (BMI) மற்றும் உடற்தகுதி சோதனை (PET) ஆகியவற்றின் படி தனது உடற்தகுதியைப் பேணுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறதாக தெரிவித்தார்.

மேலும்,கடற்படை தளபதி, சேவை செய்யும் கடற்படையினர்களுக்கும் ஓய்வுபெற்ற கடற்படையினர்களுக்கும் தேவையான சுகாதார வசதிகளை வழங்குவதற்காக கடற்படை வைத்தியசாலை அமைப்பு விரிவாக மேம்படுத்தப்பட்டுள்ளது என்றும் இந்த நலன்புரி வசதிகள் மிக உயர்ந்த தரத்துடன் விரிவுபடுத்த எதிர்பார்க்கபடுகின்றதாகவும் தெரிவித்தார்.

கடற்படை தளபதி இலங்கை கடற்படை கப்பல் கஜபாவுக்கு சொந்தமான தால்பாடு பிரிவுடன் இணைக்கப்பட்ட கடற்படையினரை உரையாற்றினார் மற்றும் புரேவி சூறாவளியின் பாதிப்புகளிலிருந்து வட மத்திய கடற்படை கட்டளையின் கப்பல்களை பாதுகாக்க பிரிவுடன் இணைக்கப்பட்ட கடற்படையினர் மேற்கொண்ட நடவடிக்கைகளை பாராட்டினார். படகுகளில் பணியாற்றும் போது அவர்கள் சட்டவிரோத நடவடிக்கைகளைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட கடமைகளில் மட்டுமே ஈடுபட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

கோவிட் 19 பரவுவதைத் தடுக்க வழங்கப்பட்ட சுகாதார அறிவுறுத்தல்கள் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றி மேற்கொள்ளப்பட்ட இந்த விஜயத்துக்காக வட மத்திய கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் சஞ்சீவ டயஸ், கடற்படை தலைமையகத்தின் மூத்த அதிகாரிகள் மற்றும் கட்டளையின் மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியைக் குறிக்கும் விதமாக கடற்படை தளபதி இலங்கை கடற்படை கப்பல் பண்டுகாபய, இலங்கை கடற்படை கப்பல் தம்மென்னா, இலங்கை கடற்படை கப்பல் புவனெக மற்றும் கடற்படை துணைப்பிரிவான ஒலுதுடுவாயில் மா மற்றும் தேங்காய் மரக்கன்றுகளையும் நட்டார்.