காலி முகத்திடலில் தேசியக் கொடியை ஏற்றும் பணி மற்றும் ஜனாதிபதி மாளிகையில் விசேட அணி வகுப்பு கடற்படை ஏற்றுக்கொண்டது.

காலி முகத்திடலில் தேசியக் கொடியை ஏற்றும் பணி மற்றும் கொழும்பு ஜனாதிபதி மாளிகையில் விசேட அணி வகுப்பு தொடர்பான கடமைகள் 2020 டிசம்பர் 31 ஆம் திகதி மற்றும் இன்று (2021 ஜனவரி 01) இலங்கை இராணுவத்தில் இருந்து இலங்கை கடற்படை ஏற்றுக்கொண்டது. இந் நிகழ்வுகள் காலி முகத்திடலில் மற்றும் கொழும்பு ஜனாதிபதி மாளிகை முன் இடம்பெற்றது.

அதன்படி, அடுத்த மூன்று மாதங்களுக்கு, காலி முகத்திடலில் தேசியக் கொடியை ஏற்றும் பணி மற்றும் கொழும்பு ஜனாதிபதி மாளிகையில் விசேட அணி வகுப்பு தொடர்பான கடமைகள் இலங்கை கடற்படையால் மேற்கொள்ளப்படும். மேலும், இலங்கை கடற்படை கப்பல் பராக்கிரம நிருவனத்தின் கட்டளை அதிகாரி கேப்டன் இந்திக குணவர்தன மேற்பார்வையில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.