கடற்படையால் நிர்மாணிக்கப்பட்ட மற்றொரு நீர் சுத்திகரிப்பு நிலையம் பொதுமக்களுக்காக திறந்து வைக்கப்பட்டது

நாட்டில் இருந்து கொடிய சிறுநீரக நோயை ஒழிக்கும் தேசிய பணியில் இலங்கை கடற்படை முக்கிய பங்கு வகிக்கிறது. அதன் மற்றொரு கட்டமாக அம்பலண்தோட்டை, சியம்பலாகொடே பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையமொன்று 2021 ஜனவரி 03 ஆம் திகதி நீர்ப்பாசன அமைச்சர் மற்றும் பாதுகாப்பு, உள்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை மாநில அமைச்சர் திரு சமல் ராஜபக்ஷ அவர்களினால் பொது மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது.

சுகாதாரம், ஊட்டச்சத்து மற்றும் சுதேச மருத்துவ அமைச்சகத்தின் தலைமையில் கடற்படையின் உதவியுடன் அம்பலண்தோட்டை, சியம்பலாகொடே பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட இந்த நீர் சுத்திகரிப்பு நிலையம் மூலம் அப்பகுதியில் வசிப்பவர்களின் சுத்தமான குடிநீர் தேவையை பூர்த்தி செய்யப்படும்.

கோவிட் 19 பரவுவதைத் தடுக்க வழங்கப்பட்ட சுகாதார அறிவுறுத்தல்கள் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றி மேற்கொள்ளப்பட்ட இந்த நிகழ்வில் ஹம்பாந்தோட்டை மாவட்ட செயலாளர், தெற்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் பிரியந்த பெரேரா, தெற்கு கடற்படை கட்டளையைச் சேர்ந்த மாலுமிகள் மற்றும் அப்பகுதியில் வசிப்பவர்கள் பங்கேற்றனர்.