‘மென் இன் வைட்ஸ்’ (Men in whites) அமைப்பிலிருந்து கடற்படை ஊனமுற்ற போர்வீரர்களுக்கு சிறப்பு ஆடைகள் வழங்கப்பட்டது

ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரிகளின் அமைப்பான மென் இன் வைட்ஸ்(Men in whites), அமைப்பு மூலம் பிளாஸ்டிக் மறுசுழற்சி செய்யப்பட்ட துணியிலிருந்து தயாரிக்கப்பட்ட டி-ஷர்ட்களை ஊனமுற்ற கடற்படை வீரர்களுக்கு வழங்குவதற்காக அமைப்பின் கொமான்டர் (ஓய்வு) ஹிரான் சொய்சா மற்றும் லெப்டினன்ட் (ஓய்வு) ஆயேஷ் இந்திரநாத் ஆகியோரால் 2021 டிசம்பர் 31 ஆம் திகதி கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவிடம் கடற்படை தலைமையகத்தில் அடையாளமாக ஒப்படைக்கப்பட்டது.

கடலோரப் பகுதியுடன் சேரும் பிளாஸ்டிக் கழிவுகளால் ஏற்படும் கடல் மாசுபாட்டைத் தடுக்கும் நோக்கில் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து மறுசுழற்சி செய்ய கடற்படை கடலோர பகுதிகளை சுத்தம் செய்கிறது. அதன் படி ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரிகளின் அமைப்பான மென் இன் வைட்ஸ்(Men in whites), அமைப்பு மற்றும் நீட் சொலியூஷன்ஸ் (Neat Solutions Pvt. Ltd) நிருவனத்தின் அனுசரணையுடன் முக்கியமாக கடற்படையால் சேகரிக்கப்படுகின்ற பிளாஸ்டிக் மறுசுழற்சி செய்யப்பட்ட துணியிலிருந்து தயாரிக்கப்பட்ட டி-ஷர்ட்களை ஊனமுற்ற கடற்படை வீரர்களுக்கு வழங்குவதற்காக டிசம்பர் 31 ஆம் திகதி இவ்வாரு கடற்படைத் தளபதியிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த குறிப்பிடத்தக்க சந்தர்ப்பத்தை குறிக்கும் வகையில், கடற்படைத் தளபதி ‘மென் இன் ஒயிட்ஸ்’ அமைப்பின் அதிகாரிகளை பாராட்டி நினைவு சின்னங்களையும் வழங்கினார்.