கடற்படையின் பங்களிப்பால் பேராதனை பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் நிர்மாணிக்கப்பட்ட லதா மண்டபம் மற்றும் தாமரை குளம் திறக்கப்பட்டது

கடற்படையின் பங்களிப்பால் பேராதனை பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் நிர்மாணிக்கப்பட்ட லதா மண்டபம் மற்றும் தாமரை குளம் 2021 ஜனவரி 06 அன்று கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவினால் பேராதெனிய பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் திறந்து வைக்கப்பட்டது

கடற்படையின் தொழில்நுட்ப திறன், மனிதவளத்தினை மற்றும் பேராதனை பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் அனுசரனையில் 2020 மார்ச் 02 ஆம் திகதி தொடங்கப்பட்ட இந்த லதா மண்டபம் மற்றும் தாமரை குளத்தின் கட்டுமானப் பணிகள் கடற்படைத் தளபதியின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் கீழ், 2021 ஜனவரி 05 க்குள் விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இங்கு கருத்து தெரிவித்த பேராதனை பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடப் பேராசிரியர் ஆசிரி அபேகுணவர்தன, நிலவும் COVID-19 தொற்றுநோயை எதிர்கொண்டு கல்வியைத் தொடரும் மருத்துவ மாணவர்களுக்கு இந்த திறந்தவெளி சிறந்த வசதியாக இருக்கும் என்று தெரிவித்தார். கடற்படைத் தளபதி மற்றும் இந்த திட்டத்தை மேற்கொண்ட மற்ற கடற்படை வீரர்களுக்கும் அவர் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார், மேலும் எதிர்காலத் திட்டங்களிலும் தொடர்ந்து கடற்படையின் உதவியை கோரினார்.

இந்த கட்டுமானப் பணிகளில் ஈடுபட்ட கடற்படை சிவில் பொறியாளர் பிரிவின் கடற்படை பணியாளர்களை உரையாற்றிய கடற்படை தளபதி மேலும் அவர்களுக்கு தனது பாராட்டுகளையும் தெரிவித்தார்.

இந்த நிகழ்வுக்காக புத்த சாசன மற்றும் கலாச்சார விவகார அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன அவர்கள், பேராதனை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் உபுல் பி திசாநாயக்க அவர்கள், பேராதனை பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின் பேராசிரியர் ஆசிரி அபேகுணவர்தன, கடற்படை சிவில் பொறியாளர் செயல் பணிப்பாளர் நாயகம் கொமடோர் எம்.ஜே.ஆர்.ஆர் மெதகொட உட்பட பேராதெனிய பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின் கல்வி மற்றும் கல்விசாரா ஊழியர்கள், மருத்துவ பீட மாணவர்கள், கடற்படை அதிகாரிகள் மற்றும் மாலுமிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.