கடற்படை தளபதியின் 36 வருட கடற்படை வாழ்க்கைக்கு ஆசீர்வாத மலித்து மதத் திட்டமொன்று இடம்பெற்றது

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் 36 ஆண்டுகால புகழ்பெற்ற கடற்படை வாழ்க்கையை குறிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட மத நிகழ்ச்சியொன்று 2021 ஜனவரி 06 ஆம் திகதி மற்றும் இன்று (2021 ஜனவரி 07) கண்டி புனித தலதா மாலிகையில் மற்றும் கொழும்பு ஹுனுபிட்டிய கங்காரமயில் நடைபெற்றது.

1985 ஜனவரி 07 ஆம் திகதி இலங்கை கடற்படையில் 13 வது கெடட் ஆட்சேர்ப்பின் கெடட் அதிகாரியாக கடற்படை நிர்வாக பிரிவுக்கு சேர்ந்த வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன, திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியில் தனது அடிப்படை பயிற்சியை வெற்றிகரமாக முடித்தார். 1987 ஆம் ஆண்டில் துணை லெப்டினெண்டாக நியமிக்கப்பட்ட அவர் பல ஆண்டுகளாக கடற்படையில் தொடர்ந்து தரவரிசையில் உயர்த்தப்பட்ட பின்னர், 2015 ஜூன் 01 அன்று ரியர் அட்மிரல் பதவிக்கு உயர்த்தப்பட்டார். அவர் 2020 ஜூலை 15 அன்று வைஸ் அட்மிரல் பதவிக்கு உயர்த்தப்பட்ட பின்னர், இலங்கை கடற்படையின் 24 வது தளபதியாக தனது கடமைகளைத் தொடங்கினார்.

ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகளில் நிபுணத்துவம் பெற்ற கடற்படைத் தளபதி, கடற்படைக் கப்பல்களுக்கு ஏவுகணை தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்திய முன்னோடி குழுவில் உறுப்பினராக உள்ளார். ஏறக்குறைய 30 ஆண்டுகளாக இலங்கையில் இருந்த பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் அவர் செய்த தைரியமான பங்களிப்புக்காக மற்றும் தாய்நாட்டின் சுதந்திரத்திற்கு அவர் அளித்த மதிப்புமிக்க பங்களிப்பிற்காக பல சேவை பதக்கங்களும் வழங்கப்பட்டுள்ளன.

அதன்படி, கடற்படைத் தளபதி தனது கடற்படை வாழ்க்கையின் 36 வது ஆண்டு நிரைவு விழாவை முன்னிட்டு ஜனவரி 6 ஆம் திகதி கண்டி புனித தலதா மாலிகைக்கு மரியாதை செலுத்தினார், இன்று (2021 ஜனவரி 07) கொழும்பு ஹுனுபிட்டிய கங்காரம விஹாரையின் துணைத் தலைவர் மரியாதைக்குரிய கலாநிதி கிரிண்தே அஸ்ஸஜி தேரருக்கு மரியாதை செலுத்தினார். அங்கு போதி பூஜை நிகழ்வும் இடம்பெற்றது.

மேலும், ஹுனுபிட்டிய கங்காரம விஹாரயவில் நடைபெற்ற மத அனுசரிப்புகளில் கடற்படைத் தளபதியின் அன்பு மனைவியும் கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவியும்மான திருமதி சந்திமா உலுகேதென்ன, அவர்களின் மகள், தந்தை மற்றும் கடற்படைத் தளபதியின் தனிப்பட்ட பணியாளர்கள் கலந்து கொண்டனர்.