கடற்படை வீரர்களுக்கு 'அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட்' தடுப்பூசி செலுத்தும் நிகழ்வு வெலிசர கடற்படை வைத்தியசாலையில் இடம்பெற்றது.

அதி மேதகு ஜனாதிபதி கோட்டாய ராஜப்கஷவின் வேண்டுகோளின் பேரில், இந்திய அரசாங்கத்தால் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்ட அஸ்ட்ராஜெனெகா கொவிட்ஷீல்ட் (AstraZeneca Covidshield) தடுப்பூசிகளின் கடற்படைக்காக ஒதுக்கப்பட்ட தடுப்பூசிகள் சுகாதார அமைச்சகத்தில் இருந்து இன்று (2021 ஜனவரி 29) வெலிசர கடற்படை பொது வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்ட பின் கொவிட் – 19 வைரஸ் தடுப்புக்காக முன்னிலையிலிருந்து செயலாற்றும் சில கடற்படை வீரர்களுக்கு முதற் கட்டமாக இந்த தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.

அஸ்ட்ராஜெனெகா கொவிட்ஷீல்ட் தடுப்பூசிகள் செலுத்தும் அரசாங்க திட்டத்தின் படி அனைத்து கடற்படை சுகாதாரப் பணியாளர்கள் உட்பட கோவிட் -19 பரவுவதைத் தடுப்பதில் நேரடியாக ஈடுபடும் கடற்படையினரகளுக்கு மற்றும் கோவிட்- 19 ஆபத்துடன் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடும் கடற்படையினர்களுக்கு இன்று (2021 ஜனவரி 29) முதல் கட்டமாக இந்த தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. அதன்படி, கடற்படைக்கு வழங்கப்பட்ட 10,000 அஸ்ட்ராஜெனெகா கொவிட்ஷீல்ட் தடுப்பூசிகள் முன்னுரிமை அடிப்படையில் கடற்படை உறுப்பினர்களுக்கு வழங்கப்படும்.

இதேபோல், கடற்படை கட்டளை வைத்தியசாலைகள் மூலம், ‘அஸ்ட்ராஜெனெகா கொவிட்ஷீல்ட்’ தடுப்பூசியை அனைத்து கடற்படை கட்டளைகளிலும் COVID 19 பரவுவதற்கு எதிராக முன்னணியில் பணியாற்றும் கடற்படை பணியாளர்களுக்கு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வெலிசர கடற்படை பொது வைத்தியசாலையில் இடம்பெற்ற இந்த தடுப்பூசி செலுத்தும் நிகழ்வுக்காக மேற்கு கடற்படை கட்டளையின் தளபதி, மருத்துவ அதிகாரிகள் மற்றும் வெலிசர கடற்படை மருத்துவமனையின் மருத்துவ பணியாளர்கள் உள்ளிட்ட மூத்த கடற்படை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த "‘அஸ்ட்ராஜெனெகா கொவிட்ஷீல்ட்’ " தடுப்பூசியை நிர்வகிப்பதற்கான அரசாங்கத்தின் திட்டம் மூலம் கோவிட் -19 அச்சுறுத்தலை எதிர்கொண்டு கடலோரப் பகுதிகளிலும் தீவிலும் பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தொடர உதவும், அத்துடன் பொது இடங்களை கிருமி நீக்கம் செய்தல், கோவிட் 19. நோய்த்தொற்றுடையவர்கள் பரிந்துரை மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களை பராமரிக்கும் போது மற்றும் COviD-19 பரவுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளைத் தொடரவும் உதவும்.