கடற்படை சிறப்பு படகுகள் படையின் புதிய கட்டளை அதிகாரியாக கேப்டன் நிச்சங்க விக்ரமசிங்க கடமைகளை ஏற்றுக்கொண்டார்

இலங்கை கடற்படை சிறப்பு படகுகள் படையின் புதிய கட்டளை அதிகாரியாக கேப்டன் நிச்சங்க விக்ரமசிங்க 2021 ஜனவரி 15 அன்று கடற்படை சிறப்பு படகுகள் படைத் தலைமையகத்தில் கடமைகளை ஏற்றுக்கொண்டார்.

இங்கு கடற்படை சிறப்பு படகுகள் படையின் முன்னாள் கட்டளை அதிகாரி கேப்டன் துசித துமிந்தவினால், கட்டளை அதிகாரியின் கடமைகளை புதிய கட்டளை அதிகாரியான கேப்டன் நிச்சங்க விக்ரமசிங்கவிடம் ஒப்படைக்கப்பட்டன. மதத் தலைவர்கள் தலைமையில் ஒரு எளிய விழாவுக்குப் பிறகு கடற்படை சிறப்பு படகுகள் படையின் 16 வது கட்டளை அதிகாரியாக அவர் அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றார்.