இந்தோனேசிய கடற்படைக் கப்பல் ஹம்பாண்தோட்டை துறைமுகத்துக்கு வருகை

இந்தோனேசிய கடற்படையின் " KRI Bung Tomo "எனும் கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டு இன்று (2021 பிப்ரவரி 05) ஹம்பாண்தோட்டை துறைமுகத்திற்கு வந்தடைந்தது.

இவ்வாரு ஹம்பாண்தோட்டை துறைமுகத்திற்கு வந்தடைந்த “KRI Bung Tomo” கப்பல் 95 மீட்டர் நீளமானது. இந்தோனேசிய கடற்படையின் முதல் வெளியீட்டு கட்டளைக்கு சொந்தமான Multi Role Light Frigate (MRLF) வகையான இக் கப்பல் 103 கடற்படை வீரர்கள் பயணம் செய்யும் வசதிகளை கொண்டுள்ளது. மேலும் இக் கப்பல் இரண்டு (02) நாட்கள் ஹம்பாண்தோட்டை துறைமுகத்தில் தங்க திட்டமிடப்பட்டுள்ளது.

வெளிநாட்டு யுத்தக் கப்பல்களின் வருகைகள் நாடுகளுக்கிடையேயான பிணைப்பைக் குறிக்கின்றன, மேலும் இது கடற்படை உறவுகளையும் வலுப்படுத்த உதவுகிறது.

தற்போதுள்ள கோவிட் 19 பரவலைத் தடுக்க வழங்கப்பட்ட சுகாதார வழிகாட்டுதல்கள் மற்றும் நடைமுறைகளுக்கு இணங்க ஹம்பாண்தோட்டை துறைமுகத்திற்கு வந்தடைந்த இக் கப்பல் தொடர்பான நடவடிக்கைகள் கட்டுப்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன மற்றும் திட்டமிடப்பட்ட நடவடிக்கைகள் மட்டுமே மேற்கொள்ளப்படும். இந்த கப்பல் 2021 பிப்ரவரி 06 ஆம் திகதி தீவில் இருந்து புறப்பட உள்ளது