ரியர் அட்மிரல் பந்துல சேனாரத்ன வடமேற்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக கடமைகளை ஏற்றுக்கொண்டார்

வடமேற்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் பந்துல சேனாரத்ன இன்று (2021 பிப்ரவரி 15) வடமேற்கு கடற்படை கட்டளை தலைமையகத்தில் கடமைகளை ஏற்றுக்கொண்டார்.

வடமேற்கு கடற்படை கட்டளையின் முன்னால் தளபதி ரியர் அட்மிரல் டி.கே.பி தசநாயக்கவினால் இலங்கை கடற்படை கப்பல் பரன நிருவனத்தில் அமைந்துள்ள வடமேற்கு கடற்படை கட்டளை தலைமையகத்தில் வைத்து ரியர் அட்மிரல் பந்துல சேனாரத்னவிடம் கடமைகளை ஒப்படைக்கப்பட்டது. வடமேற்கு கடற்படை கட்டளைத் தளபதியாக கடமைகளை ஏற்றுக்கொள்வதற்கு முன்பு, ரியர் அட்மிரல் பந்துல சேனரத்ன கடற்படை தலைமையகத்தில் நிர்வாக பணிப்பாளர் நாயகமாக பணியாற்றினார்.

ரியர் அட்மிரல் பந்துல சேனாரத்னவை கடற்படை மரபுகளுக்கமைய மரியாதை செலுத்தி வடமேற்கு கடற்படை கட்டளைக்கு வரவேற்கப்பட்டதுடன் குறித்த கட்டளையில் கடமையாற்றிய ரியர் அட்மிரல் டி.கே.பி தசநாயக்கவுக்கு கடற்படை அதிகாரிகள் தன்னுடைய வாழ்த்துக்கள் தெரிவித்து பாரம்பரிய கடற்படை வணக்கத்துடன் விடைபெற்றனர்.