ரியர் அட்மிரல் வய்.என்.ஜெயரத்ன கிழக்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக கடமைகளை ஏற்றுக்கொண்டார்

கிழக்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் வய்.என்.ஜெயரத்ன இன்று (2021 பிப்ரவரி 15) கிழக்கு கடற்படை கட்டளை தலைமையகத்தில் கடமைகளை ஏற்றுக்கொண்டார்.

கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதியாக கடமைகளை ஏற்றுக்கொள்வதற்கு முன்பு, ரியர் அட்மிரல் வய்.என். ஜெயரத்ன கடற்படை தலைமையகத்தில் பணிப்பாளர் நாயகம் நடவடிக்கைகளாக பணியாற்றினார். ரியர் அட்மிரல் வய்.என். ஜெயரத்னவை கடற்படை மரபுகளுக்கமைய மரியாதை செலுத்தி கிழக்கு கடற்படை கட்டளைக்கு வரவேற்கப்பட்டதுடன் கிழக்கு கடற்படை கட்டளையின் முன்னால் தளபதி ரியர் அட்மிரல் ருவன் பெரேரா திருகோணமலை கடற்படை கப்பல்துறை வளாகத்தில் அமைந்துள்ள கிழக்கு கடற்படை கட்டளை தலைமையகத்தில் வைத்து நியமனம் தொடர்பான கடமைகளையும் பொறுப்புகளையும் ரியர் அட்மிரல் வய்.என். ஜெயரத்னவுக்கு அதிகாரப்பூர்வமாக ஒப்படைத்தார்.

குறித்த கட்டளையில் கடமையாற்றிய ரியர் அட்மிரல் ருவன் பெரேராவுக்கு கடற்படை அதிகாரிகள் தன்னுடைய வாழ்த்துக்கள் தெரிவித்து பாரம்பரிய கடற்படை வணக்கத்துடன் விடைபெற்றனர்.