கப்பல்களுக்கு பாதுகாப்பாக அணுகல்,சோதனை செய்தல், கைது செய்தல், மேம்படுத்தப்பட்ட வெடி மருந்து சாதனகள் அடையாளம் காணுதல் மற்றும் தடுத்தல் குறித்த பாடநெறி திட்டம் திருகோணமலையில் வெற்றிகரமாக நிறைவடைந்தது (VBSS C-IED)

போதைப்பொருள் மற்றும் குற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் அலுவலகத்தின் உலகளாவிய கடல்சார் குற்றத் திட்டத்தின் மேற்பார்வையின் கீழ் இலங்கை கடற்படையின் சிறப்பு படகு படை நடத்திய கப்பல்களுக்கு பாதுகாப்பாக அணுகல், சோதனை செய்தல், கைது செய்தல், மேம்படுத்தப்பட்ட வெடி மருந்து சாதனகள் அடையாளம் காணுதல் மற்றும் தடுத்தல் பாடநெறி திட்டம் 2021 பிப்ரவரி 19 அன்று திருகோணமலையில் வெற்றிகரமாக நிறைவடைந்தது.

மேம்படுத்தப்பட்ட வெடி மருந்து சாதனங்கள் பொருத்தப்பட்ட (Improvised Explosive Devices) சந்தேகத்திற்கிடமான கப்பல்களுக்கு பாதுகாப்பாக அணுகல், சோதனை செய்தல், கைது செய்தல் தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் மாலுமிகளுக்கு அணுகல் நடைமுறைகள் மற்றும் கடல்சார் சட்ட அமலாக்க நடவடிக்கைகள் பற்றிய விரிவான அறிவு வழங்கும் பாடநெறியொன்று கடற்படை சிறப்பு கப்பல் படை மற்றும் போதைப்பொருள் மற்றும் குற்ற பயிற்சி பயிற்றுநர்கள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் அலுவலகத்தின் பயிற்றுநர்களால் இரண்டு வாரங்களாக திருகோணமலையில் நடத்தப்பட்டது இதில் இலங்கை கடற்படை மற்றும் இலங்கை கடலோர காவல்படையைச் சேர்ந்த 24 மாலுமிகள் கலந்து கொண்டனர்.

பாடநெறியை வெற்றிகரமாக முடித்த பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன, இந்நிகழ்ச்சியில் போதைப்பொருள் மற்றும் குற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் அலுவலகத்தில் உலகளாவிய கடல்சார் குற்றத் திட்டத்தில் துணைத் தலைவர் திருமதி சிரி பியுனே (Siri Bjune), கிழக்கு கடற்படை கட்டளையின் துணை தளபதி கமடோர் அனுர தனபால, சிறப்பு படகுப் படையின் கட்டளை அதிகாரி கேப்டன் நிஸ்ஸங்க விக்கிரமசிங்க, போதைப்பொருள் மற்றும் குற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் அலுவலக அதிகாரிகள் உட்பட சிறப்பு படகுப் படைகளின் பயிற்றுனர்கள் கலந்து கொண்டனர்.

மேலும், கோவிட் 19 பரவாமல் தடுக்க வழங்கப்பட்ட சுகாதார ஆலோசனைகள் மற்றும் நடைமுறைகளை பின்பற்றி இந்த பாடநெறி மற்றும் சான்றிதழ் விருது வழங்கும் விழாவை கடற்படை நடத்தியது.