யுத்தத்தின் போது ஊனமுற்ற வீரர்களுக்காக “மிஹிந்து செத் மெதுரவில்” நடத்தப்பட்ட சிறப்பு இரவு விருந்து நிகழ்வில் கடற்படைத் தளபதி பங்கேற்பு

யுத்தத்தின் போது ஊனமுற்ற வீரர்களின் நலனுக்காக இலங்கை இராணுவத்தால் பராமரிக்கப்படுகின்ற மிஹிந்து செத் மெதுர நிலையத்தில் தங்கி இருக்கும் ஊனமுற்ற இராணுவ உறுப்பினர்களுக்காக பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவு நடத்திய சிறப்பு இரவு விருந்து 2021 பிப்ரவரி 20 ஆம் திகதி பாதுகாப்பு செயலாளர், ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன மற்றும் பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சித்ராணி குணரத்ன ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்ச்சியில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன மற்றும் கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சந்திமா உலுகேதென்ன கழந்து கொண்டனர்.

இலங்கை இராணுவத்தில் பணியாற்றும் போது பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையில் ஊனமான போர்வீரர்களை கவனிக்க இலங்கை இராணுவத்தால் தெஹிவலை, அத்திடிய பகுதியில் மிஹிந்து செத் மெதுர நிலையம் பராமரிக்கப்படுகிறது. அங்கு வசிக்கும் ஊனமுற்ற போர்வீரர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த சிறப்பு இரவு விருந்து, போர்வீரர்களின் இன்பத்திற்காக இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளுடன் வண்ணமயமாக இருந்தது. ஊனமுற்ற போர்வீரர்களுக்கு பரிசு வழங்குவதில் கடற்படைத் தளபதி மற்றும் கடற்படை சேவா வனிதா பிரிவுத் தலைவி ஆகியோர் பங்கேற்றனர்.

மேலும், கோவிட் 19 பரவாமல் தடுக்க வழங்கப்பட்ட சுகாதார ஆலோசனைகள் மற்றும் நடைமுறைகளை பின்பற்றி ஏற்பாடு செய்யப்பட்ட இந்த சிறப்பு இரவு விருந்து நிகழ்வுக்காக பாதுகாப்பு பதவி நிலை பிரதானி மற்றும் இராணுவத் தளபதி, விமானப்படைத் தளபதி, இயக்குநர் பொது சிவில் பாதுகாப்புத் துறை மற்றும் அவர்களது துணைவர்கள் மற்றும் இலங்கை இராணுவத்தின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.