ஜப்பான் கடல்சார் தற்காப்பு படைக்கு சொந்தமான கப்பலொன்று ஹம்பாண்தோட்டை துறைமுகத்துக்கு வருகை

ஜப்பான் கடல்சார் தற்காப்பு படைக்கு சொந்தமான "செடொகிரி” (Setogiri) எனும் கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டு 2021 பிப்ரவரி 25 ஆம் திகதி ஹம்பாண்தோட்டை துறைமுகத்திற்கு வந்தடைந்தது.

இவ்வாரு ஹம்பாண்தோட்டை துறைமுகத்திற்கு வந்தடைந்த “செடொகிரி” (Setogiri) கப்பல் 137 மீட்டர் நீளமான டிஸ்டோயர் (Destroyer) வகைச் சேர்ந்த ஒரு கப்பலாக குறிப்பிடத்தக்கது. இது 220 கடற்படை வீரர்கள் பயணம் செய்யும் வசதிகளை கொண்டுள்ளது.

தற்போதுள்ள கோவிட் 19 பரவலைத் தடுக்க வழங்கப்பட்ட சுகாதார வழிகாட்டுதல்கள் மற்றும் நடைமுறைகளுக்கு இணங்க இக் கப்பல் திட்டமிடப்பட்ட நடவடிக்கைகள் மட்டுமே மேற்கொள்ளும். குறித்த கப்பல் இன்று (2021 பிப்ரவரி 26) தீவில் இருந்து புறப்பட உள்ளது .