தேசிய பாதுகாப்பு ஆலோசகர் முத்தரப்பு நிரந்தர செயலகமொன்று கடற்படை தலைமையகத்தில் நிறுவப்பட்டது

இந்தியா, இலங்கை மற்றும் மாலத்தீவு ஆகிய நாடுகள் கூட்டாக இனைந்து கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான தேசிய பாதுகாப்பு ஆலோசனை பற்றி முத்தரப்பு நிரந்தர செயலகமொன்று பாதுகாப்பு செயலாளர், ஜெனரால் (ஓய்வு) ) கமல் குணரத்ன தலமையில் இன்று (2021 மார்ச் 21) கடற்படை தலைமையகத்தில் நிறுவப்பட்டது.

இந்தியா, இலங்கை மற்றும் மாலத்தீவு ஆகிய நாடுகளின் பாதுகாப்புத் ஆலோசகர்களின் வருகையுடன் 2020 நவம்பர் 28 ஆம் திகதி கொழும்பில் நடைபெற்ற கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான 04 வது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் முத்தரப்பு மாநாட்டில் எட்டப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், இந்த நிரந்தர செயலகம் கடற்படை தலைமையகத்தில் இன்று நிறுவப்பட்டது.

அதன்படி, நிறுவப்பட்ட கடல்சார் ஒத்துழைப்பு மூலம், பிராந்திய கடல்சார் விவகாரங்கள், மனிதாபிமான உதவிகள் மற்றும் பேரழிவு நிவாரணம், கூட்டுப் பாடநெறிகள், பயிற்சிகள் மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றை மேலும் மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், கடல்சார் பாதுகாப்பு மற்றும் அச்சுறுத்தல்கள், கடல் மாசுபாடு மற்றும் எண்ணெய் கசிவுகளுக்கு பதிலளித்தல், கடல் மற்றும் நீருக்கடியில் பாரம்பரியம், கடல்சார் சட்ட விதிகள் மற்றும் கோவிட் 19 ஐ நீக்குவதற்கான பதிலலிப்பு ஆகிய நடவடிக்கைகள் ஒத்துழைப்புடன் மேற்கொள்ள இந்த கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு மூலம் எதிர்பாக்கப்படுகிறது. இதற்கிடையில், புதிதாக அமைக்கப்பட்ட செயலக அமைப்பின் ஒருங்கிணைப்பு அதிகாரியாக கடற்படை இயக்குநர் நடவடிக்கைகள் நியமிக்கப்பட்டார்.

இந் நிகழ்வுக்காக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆய்வுகள் நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் அட்மிரல் ஜெயநாத் கொலம்பகே, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன, பணிப்பாளர் நாயகம் நடவடிக்கைகள் ரியர் அட்மிரல் பிரசந்ந மஹவிதான, கடற்படை செயல்பாட்டு இயக்குநர், இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேப்டன் விகாஸ் சூத் (Captain Vikas Sood) மற்றும் மாலத்தீவு உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் கேர்ணல் இஸ்மயில் நசீர் (Ismail Nasir) ஆகியோர் கலந்து கொண்டனர்.