சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கடற்படை சேவா வனிதா பிரிவினால் ஒரு பிரமாண்டமான நிகழ்ச்சி

மார்ச் 08 ஆம் திகதி ஈடுபடுகின்ற சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ‘சவால் செய்ய தேர்வு செய்வோம்’ என்ற தலைப்பில் இலங்கை கடற்படையின் சேவா வனிதா பிரிவு மகளிர் தின கொண்டாட்டத் திட்டத்தையும் 'சிந்துலிய' என்ற இதழின் வெளியீடு விழாவும் பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சித்ரானி குணரத்னவின் தலைமையில் அட்மிரல் சோமதிலக திசானநாயக்க கேட்போர்கூட்டத்தில் 2021 மார்ச் 08 ஆம் திகதி பிரமாண்டமாக நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி சந்திமா உலுகேதென்னவின் கருத்தை அடிப்படையாகக் கொண்டு ஏற்பாடுசெய்யப்படுகின்ற கடற்படை சேவா வனிதா மகளிர் தின கொண்டாட்டங்களுக்கு பெண்களின் சுவைக்கு ஏற்ப அவர்களின் அறிவு மற்றும் திறன்களை மேம்படுத்தும் நோக்கில் நாள் முழுவதும் மூத்த சமையல்காரர் தேசபந்து டி. பபிலிஸ் சில்வாவின் பங்கேற்பில் சமையல் பட்டறையொன்றும் பிற மூத்த வள நபர்களின் பங்கேற்பின் அழகு கலாச்சார திட்டம் மற்றும் கைவினைத் திட்டமும் நடத்தப்படும். இந்த சர்வதேச மகளிர் தின கொண்டாட்டங்களுடன் இணைந்து பேராசிரியர் பிரணீத் அபயசுந்தர தொகுத்த 'சிந்துலிய' என்ற இதழும் வெளியீடப்படும்.

குடும்பம், சமூகம், நாடு மற்றும் உலகிற்கு பெண்கள் அளிக்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை சர்வதேச மகளிர் தினம் அங்கீகரிக்கிறது. அதே வீணில், கடற்படை சேவா வனிதா பிரிவு ஏற்பாடு செய்துள்ள மகளிர் தின கொண்டாட்டங்கள் மூலம் பெண் அதிகாரிகள், பெண் மாலுமிகள் மற்றும் கடற்படை மாலுமிகளுக்கு வலிமையும் ஊக்கமும் அளிக்கும் அவர்களின் மனைவிகளும் பாராட்டப்படும்.