கடற்படைத் தளபதி பாதுகாப்பு செயலாளருடன் சந்தஹிரு சேய மற்றும் மிஹிந்து மகா சேயவின் கட்டுமான மற்றும் மறுசீரமைப்பு பணிகளை பார்வையிட்டார்

பாதுகாப்பு செயலாளர் (ஓய்வு) கமல் குணரத்ன அவர்கள் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவுடன் 2021 மார்ச் 06 அன்று அனுராதபுரம் சந்தஹிரு சேயவின் நிர்மாணப்பணிகளை ஆய்வு செய்து, மிஹிந்தலை மிஹிந்து மகா சேயவின் மறுசீரமைப்பு பணிகளை தொடங்கும் நிகழ்வுக்காக கழந்து கொண்டார்.

ஆயுதப் படைகள் மற்றும் சிவில் பாதுகாப்புப் படையின் தலைமையில் அனுராதபுரம் புனிதப் பகுதியில் கட்டப்படுகின்ற சந்தஹிரு சேயவின் நிர்மாணப்பணிகளின் முன்னேற்றம் குறித்து பாதுகாப்புச் செயலாளர் ஆய்வு செய்து, இந்த ஆண்டு நவம்பர் மாதத்திற்குள் அனைத்து நிர்மாணப்பணிகளையும் முடிக்க அறிவுறுத்தினார். மேலும், பாதுகாப்பு செயலாளரும் கடற்படைத் தளபதியும் சந்தஹிரு சேயவின் சதுர அறையில் கட்டுமானத்துக்காக முறையாக கற்கள் வைத்தனர். மேலும், முன்மொழியப்பட்ட நுழைவாய் அமைப்பதற்கும் அடிக்கல் நாட்டினர்.

மேலும்,அனுராதபுரத்தில் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மிஹிந்தலை ரஜமஹா விஹாரயவின் புனரமைப்பு பணிகளை 2020 அக்டோபர் 24 ஆம் திகதி அதி மேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டன. அங்கு அவர் மிஹிந்து மகா சேயவின் மறுசீரமைப்பு பணிகளை கடற்படையிடம் ஒப்படைத்தார். இதை நினைவு கூர்ந்த பாதுகாப்புச் செயலாளர் கடற்படைத் தளபதியின் பங்களிப்புடன் மிஹிந்து மகா சேயாவின் புனரமைப்புப் பணிகளை மகா சங்கத்தின் ஆசீர்வாதத்துடன் தொடங்கினார். மிஹிந்தலை புனிதப் பகுதியில் மேற்கொள்ளப்படுகின்ற மற்ற சீரமைப்பு பணிகளும் மிஹிந்தலை ரஜ மகா விஹாரையின் பிரதம விஹாராதிபதி வண. வலவாஹெங்குனவெவ தர்மரத்ன தேரரின் பங்கேற்புடன் பாதுகாப்பு செயலாளர் மற்றும் கடற்படைத் தளபதி பார்வையிட்டனர்.

இந்த கண்கானிப்பு விஜயத்துக்காக சிவில் பாதுகாப்பு படையின் பணிப்பாளர் நாயகம், வன்னி பாதுகாப்புப் படைகளின் தளபதி, வடமத்திய கடற்படை கட்டளையின் தளபதி உட்பட ஆயுதப்படை மற்றும் சிவில் பாதுகாப்புப் படையின் மூத்த உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.