விரைவு நடவடிக்கை படகுகள் படை தகுதிப் பெறும் பாடநெறியை நிறைவு செய்த 37 கடற்படை உறுப்பினர்களுக்கு சின்னங்கள் அணிவிக்கப்பட்டன

விரைவு நடவடிக்கை படகுகள் படையின் 25 வது தகுதிப் பெறும் பாடநெறியை முடித்த ஒரு அதிகாரி மற்றும் 36 மாலுமிகளுக்கான சின்னங்கள் அணிவிக்கும் விழா 2021 மார்ச் 10 ஆம் திகதி புத்தலம் கங்கேவாடிய விரைவு நடவடிக்கை படகுகள் படைத் தலைமையகத்தில் இடம்பெற்றதுடன் விரைவு நடவடிக்கை படகுகள் படையின் கட்டளை அதிகாரி கொமாண்டர் சாகர உதயங்கவின் அழைப்பின் பேரில் வடமேற்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் எஸ்.பி.சேனரத்ன இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கழந்துகொண்டார்.

ஆறு (6) மாதமாக நடைபெற்ற இந்த பயிற்சி பாடநெரி மூலம் உயிர் காத்தல் மற்றும் பேரழிவு சூழ்நிலைகளில் மேற்கொள்ளப்படும் மீட்புப் பணிகள் குறித்த அவர்களின் திறமைகளை மேம்படுத்தப்பட்டது.

பயிற்சி காலத்தில் சிறந்து விளங்கியவர்களுக்கு சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன. சிறந்த பயிற்சியாளருக்கான விருதை கடற்படை வீரர் சி.எல்.எஸ். ஜெயசிங்க வென்றார், சிறந்த படகு கையாளுபவருக்கான விருதை கடற்படை வீர்ர் வய்.எஸ்.சி விஜேசிரி வென்றார். சிறந்த உயிர் காத்தல் பயிற்சியாளருக்கான விருதை கடற்படை வீரர் எஸ்.பி.டி.ஏ.எஸ் மிகார வென்றார். கடற்படை வீரர் எச்.எம்.எச்.சதுரங்க சிறந்த உடல் ஆரோக்கியத்துடன் பயிற்சியாளருக்கான விருதை வென்றார்.

இந்த சின்னங்கள் அணிவிக்கும் விழாவின் போது, 25 வது தகுதி பாடநெரியின் கடற்படையினர் நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்சியொன்று மற்றும் பல சிறப்பு காட்சிகள் நடத்தி தங்கள் நிபுணத்துவத்தை வெளிப்படுத்தினர்.

கோவிட் 19 பரவுவதைத் தடுப்பதுக்காக வழங்கப்பட்ட சுகாதார அறிவுறுத்தல்கள் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றி மேற்கொள்ளப்பட்ட இந் நிகழ்வுக்காக வட மேற்கு கடற்படை கட்டளையின் துனை தளபதி கமடோர் பிரசாத் காரியப்பெரும உள்ளிட்ட வடமேற்கு கடற்படை கட்டளையின் மூத்த மற்றும் இளைய அதிகாரிகள் மற்றும் மாலுமிகள் கலந்து கொண்டனர்.