கடற்படையினரால் புதுப்பிக்கப்பட்ட மிதி படகொன்று கராபிட்டி போதனா வைத்தியசாலைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது

கடற்படையினரால் கடந்த ஆண்டில் புதிதாக கட்டப்பட்ட நோய்த்தடுப்பு பராமரிப்பு பிரிவுக்கான (Palliative Care Unit) வார்டு வளாகத்தின் ஓராண்டு நிறைவை முன்னிட்டு குறித்த வைத்தியசாலை ஏற்பாடு செய்திருந்த ஒரு நிகழ்ச்சியின் போது வார்டு வளாகத்தில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் மன ஆரோக்கியத்திற்காக கடற்படையினரால் புதுப்பிக்கப்பட்ட மிதி படகொன்று தெற்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் பிரியந்த பெரேராவின் தலைமையில் நன்கொடையாக வழங்கப்பட்டது.

இந்த வார்டு வளாகத்தில் சிகிச்சையளிக்க முடியாத நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் மன நலனுக்காக PD Fly Marine நிருவனத்தின் உரிமையாளர் ஜே.எல்.கருணரத்ன அவர்களினால் நன்கொடை அளித்த இந்த படகு தெற்கு கடற்படை கட்டளையின் பொறியியல் துறையின் மேற்பார்வையின் கீழ் மிதி படகொன்றாக புதுப்பிக்கப்பட்ட பின் இவ்வாரு கராபிட்டி போதனா வைத்தியசாலைக்கு தெற்கு கடற்படை கட்டளையின் தளபதியால் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் தெற்கு கடற்படை கட்டளையின் மூத்த மற்றும் இளைய அதிகாரிகள், வைத்தியசாலையின் மருத்துவ மற்றும் மேலாண்மை ஊழியர்கள் மற்றும் நன்கொடையாளர்கள் உட்பட பல சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.