கடற்படை சேவா வனிதா பிரிவு உலக வன தினத்தை முன்னிட்டு மரம் நடும் திட்டமொன்றை நடத்தியது

கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சந்திமா உலுகேதென்னவின் கருத்தின் படி 2021 மார்ச் 21 ஆம் திகதி ஈடுபட்ட உலக வன தினத்தை முன்னிட்டு கடற்படை சேவா வனிதா பிரிவு அனைத்து கடற்படை கட்டளைகளையும் உள்ளடக்கி மரம் நடும் திட்டமொன்றை ஏற்பாடு செய்தது. அதன் படி மேற்கு கடற்படை கட்டளையில் நடைபெற்ற நிகழ்வு சேவா வனிதா பிரிவின் தலைவியின் அழைப்பின் பேரில், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்வின் தலைமையில் 2021 மார்ச் 21 அன்று வெலிசர இலங்கை கடற்படை கப்பல் கெமுனு நிறுவனத்தில் நடைபெற்றது.

இந்த மரம் நடும் திட்டத்திற்குத் தேவையான தாவரங்கள் 'துரு சந்சதய' சுற்றுச்சூழல் அமைப்புடன் ஒருங்கிணைந்து எல்.பி. பைனான்ஸ் லிமிடெட் வழங்கியது. உலக வன தினத்தை முன்னிட்டு வெலிசர, இலங்கை கடற்படை கப்பல் கெமுனு நிறுவன வளாகத்தில் தாவரங்களை நடவு செய்ய கடற்படை தளபதி, சேவா வனிதா பிரிவின் தலைவி, சேவா வனிதா பிரிவின் புதிய துனை தலைவி திருமதி திலினி வேவிட உட்பட மேற்கு கடற்படை கட்டளையின் தளபதி மற்றும் சேவா வனிதா பிரிவின் மூத்த உறுப்பினர் அயோனி வேவிட ஆகியோர் கழந்து கொண்டனர். மேலும், இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சேவா வனிதா செயற்குழு உறுப்பினர்கள் உட்பட சேவா வனிதா பிரிவின் மற்ற உறுப்பினர்களும் இந்த நடவு நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில் மூத்த மற்றும் இளைய அதிகாரிகள் உட்பட கட்டளையின் மாலுமிகள் மற்றும் கடற்படை சேவா வனிதா பிரிவின் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.