OCEANLUST மின்சார இதழ் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட 2021 ஆம் ஆண்டின் முதல் பவளப்பாறை சுத்தம் செய்தல் திட்டம் கடற்படைத் தளபதியின் தலைமையில்

OCEANLUST மின்சார இதழ் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட 2021 ஆம் ஆண்டின் முதல் பவளப்பாறை சுத்தம் செய்தல் திட்டத்தின் தொடக்க விழா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் தலமையில் இன்று (2021 மார்ச் 27) உஸ்வெடகெய்யாவ Malima Club House மண்டபத்தில் நடைபெற்றது. இந்த திட்டத்தின் போது களனி ஆற்றின் முகப்பில் இருந்து வடக்கு நோக்கி விரிந்திருக்கும் பவளப்பாறைகளை மற்றும் கடற்கரையை சுத்தம் செய்யப்பட்டது.

கடலில் குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை முற்றிலுமாக அகற்றி, சுத்தமான கடல் சூழலைப் பேணும் நோக்கில் இந்த சுத்தம் செய்தல் திட்டம் OCEANLUST மின்சார இதழின் அனுசரணையில் செயல்படுத்தப்படுகிறது. ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரிகளின் குழுவான Men in Whites உறுப்பினர்களும் இந்த திட்டத்தில் நேரடியாக ஈடுபட்டுள்ளனர்.

கடற்படைத் தளபதியின் தலமையில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தின் போது கடற்படை சுழியோடிநபர்களினால் களனி ஆற்றின் முகப்பில் இருந்து வடக்கு நோக்கி விரிந்திருக்கும் பவளப்பாறைகளில் சிக்கியுள்ள பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் குப்பைகளை அகற்றப்பட்டன. இந்த திட்டத்துக்கு இணையாக உஸ்வெடகெய்யாவவில் இருந்து பிரிதிபுர பகுதி வரை 5 கி.மீ நீளமுள்ள கடற்கரை பகுதியை சுத்தம் செய்யப்பட்டன. இதுக்காக Men in Whites உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள், இலங்கை கடற்படை உறுப்பினர்கள், இலங்கை கடலோர காவல்படை உறுப்பினர்கள், கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையம், கடலோர பாதுகாப்பு மற்றும் கடலோர வள மேலாண்மை துறை உட்பட பல அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் அப்பகுதி மக்கள் பங்களிப்பு வழங்கினர்.

இந் நிகழ்வில் இலங்கை கடற்படையை பிரதிநிதித்துவப்படுத்தி கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சந்திமா உலுகேதென்ன, துனை தலைமை அதிகாரி மற்றும் மேற்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் ரியர் அட்மிரல் மெரில் சுதர்ஷன, கடற்படையின் மூத்த மற்றும் இளைய அதிகாரிகள் உட்பட ஏராளமான மாலுமிகள் கலந்து கொண்டனர்.

கடலோர மற்றும் கடல் வளங்களின் மதிப்பை அங்கீகரிப்பதன் மூலம் கடலோரத்தை சுத்தம் செய்வதற்கு பொது மக்களின் மனப்பான்மையை எழுப்புதல் மற்றும் கடற்கரையை சுத்தம் செய்வதற்கு சமூக பங்களிப்புகளைப் பெறுதல் ஆகிய நோக்கங்களுடன் கடற்படை தீவைச் சுற்றியுள்ள கடலோர தூய்மைப்படுத்தும் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்துகிறது, மேலும், பிற அரசு நிறுவனங்கள் மற்றும் சிவில் சமூகம் நிறுவனங்கள் ஏற்பாடு செய்கின்ற இதுபோன்ற கடலோர தூய்மைப்படுத்தும் நடவடிக்கைகளுக்கும் கடற்படை உதவுகிறது.