சந்தஹிரு சேய தூபியின் நாற்சதுரத்தினுள் புதையல்களை வைப்புச் செய்யும் மகோட்ஷவத்தில் கடற்படைத் தளபதி கலந்து கொண்டார்

சந்தஹிரு சேய தூபியின் நாற்சதுரத்தினுள் புதையல் பொருட்கள் மற்றும் புனித நினைவுச் சின்னங்களை வைப்புச் செய்யும் மகோட்ஷவம் இன்று (2021 மார்ச் 28) பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) அவர்களின் தலைமையில் அனுராதபுரம் புனித நகரத்தில் தூபி அமையப்பெற்றுள்ள வளாகத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்ச்சியில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன மற்றும் கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சந்திமா உலுகேதென்ன கலந்து கொண்டனர்.

சந்தஹிரு சேய தூபியின் நாற்சதுரத்தினுள் வைப்புச் செய்வதுக்காக வண. மகா சங்கத்தினர் மற்றும் நாட்டின் பல பாகங்களில் உள்ள பக்தர்கள் ஆகியோரிடமிருந்து சேகரிக்கப்பட்ட புதையல் பொருட்களை வண. மகா சங்கத்தினரின் ஆசிர்வாதத்துடன் இன்று (2021 மார்ச் 28) வைப்புச் செய்யப்பட்டது.

குறித்த நிகழ்வின் போது ஆயுதப்படைகள் மற்றும் சிவில் பாதுகாப்புத் துறை வழங்கிய புதையல் பொருட்களை சந்தஹிரு சேய தூபியின் நாற்சதுரத்தினுள் வைப்புச் செய்யப்பட்டது. அப்போது கடற்படையின் அனைத்து உறுப்பினர்களின் பங்களிப்புடன் வழங்கப்பட்ட புதையல் பொருட்களை தூபியில் வைப்புச் செய்ய கடற்படைத் தளபதி நடவடிக்கை எடுத்தார். இதுக்காக தேவையான நிதி ஏற்பாடுகளை கடற்படை புத்த சங்கத்தினால் வழங்கப்பட்டது.

மூன்று தசாப்தங்களாக நீடித்த மிலேச்சத்தனமான பயங்கரவாதத்தை நாட்டிலிருந்து முற்றாக இல்லாதொழிக்க முப்படை, பொலிஸார் மற்றும் சிவில் பாதுகாப்பு படை வீரர்கள் மேற்கொண்ட தியாகங்களை நினைவு கூறும் வகையில் 5 வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியும் தற்போதைய பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷவினால் சந்தஹிரு சேய தூபியின் நிர்மானப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டது.

முன்னாள் பாதுகாப்பு செயலாளரும் தற்போதைய ஜனாதிபதியுமான கோட்டாபய ராஜபக்ஷவின் பணிப்புரைக்கு அமைய இந்த தூபியின் தற்போதைய கட்டுமான பணிகள் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிகழ்வில் மல்வத்து பீடத்தைச் சேர்ந்த அதி வண. ராஜகீய பண்டித கலாநிதி பஹமுனே தர்மகீர்த்தி ஸ்ரீ சுமங்கள தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினர், அமைச்சர்கள், வட மத்திய மாகாண ஆளுநர், பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சுக்களின் செயலாளர்கள், கடற்படை தளபதி, விமானப்படை தளபதி, பொலிஸ் மா அதிபர், சிவில் பாதுகாப்பு படை பணிப்பாளர் நாயகம் மற்றும் முப்படைகளின் மூத்த அதிகாரிகள் உட்பட பக்தர்கள் கலந்துகொண்டனர்.