ஹன்வெல்ல, நிரிபொல ரோமன் கத்தோலிக்க முதன்மை கல்லூரியின் புதுப்பிக்கும் நடவடிக்கைகளுக்காக கடற்படை பங்களிப்பு

இலங்கை கடற்படையின் மற்றொரு சமூக சேவையாக, கடற்படை பங்களிப்புடன் மற்றும் அமெரிக்காவில் வசிக்கும் டாக்டர் மிரான் சல்காதுவின் நிதி உதவியுடன், ஹன்வெல்ல, நிரிபொல ரோமன் கத்தோலிக்க முதன்மை கல்லூரியில் நிர்மானிக்கப்பட்ட குழந்தைகள் விளையாட்டு மைதானமொன்று மற்றும் புதுப்பிக்கப்பட்ட பிற இடங்கள் மார்ச் 29 அன்று திறந்துவைக்கப்பட்டது.

அதன்படி, குழந்தைகளின் விளையாட்டு மைதானத்தைத் தயாரிப்பதற்கும், நீர் விநியோகிக்கும் குழாய்கள், முதலுதவி அறை மற்றும் பாடசாலையின் பல வசதிகளை புதுப்பிப்பதற்கும் கடற்படை பங்களிப்பு வழங்கியது. மேற்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் மெரில் சுதர்ஷன மற்றும் டாக்டர் மிரான் சல்காதுவின் உறவினர் திரு. ரஞ்சித் பெர்னாண்டோ ஆகியோரின் தலைமையில் இந்த திட்டங்கள் திறந்து வைக்கப்பட்டன. இந்த வசதிகள் கிடைப்பதன் மூலம் பாடசாலை குழந்தைகளின் சில அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யப்படும்.

மேலும், கோவிட் 19 பரவுவதைத் தடுக்க வழங்கப்பட்ட சுகாதார அறிவுறுத்தல்கள் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றி ஏற்பாடு செய்யப்பட்ட இந் நிகழ்வுக்காக நிரிபொல சிறுவர் இல்லத்தின் முதல்வர் சகோதரி மேரி சிசிலியா, சீதாவக மாகாண கல்வி இயக்குநர் திருமதி ஷிராணி திசாநாயக்க, குறித்த பாடசாலையின் அதிபர் திருமதி ஜே.ஏ.ஏ.கே ஜயசூரிய உட்பட ஆசிரியர்கள் மற்றும் கட்டுமானத்தில் ஈடுபட்ட மாலுமிகள் கலந்து கொண்டனர்.