ஹிம்புடான ஸ்ரீ அபினவாராம விஹாரயத்தில் நிர்மானிக்கப்பட்ட புதிய 'தாது மந்திரய' கடற்படைத் தளபதியால் திறந்து வைக்கப்பட்டது

கடற்படையினரால் ஹிம்புடான ஸ்ரீ அபினவாராம விஹாரயத்தில் நிர்மானிக்கப்பட்ட புதிய 'தாது மந்திரய' இன்று (2021 ஏப்ரல் 02) கடற்படைத் தளபதியால் திறந்து வைக்கப்பட்டது.

ஹிம்புடான ஸ்ரீ அபினவாராமாதிபதி சாசன கீர்த்தி ஸ்ரீ சத்தர்ம வாகிஷ்வர வண. எல்வல புத்தசிரி தேரர் விடுத்த வேண்டுகோளுக்கு பதிலளித்து விஹாரயத்தில் நீண்ட கால குறைவாக இருந்த இந்த 'தாது மந்திரய' கடற்படையினரால் நிர்மானிக்கப்பட்டது. கடற்படை வழங்கிய இந்த சமூக சேவைக்காக விஹாயத்தின் தலைமை தேரர் உட்பட அப்பகுதி மக்கள் கடற்படையை பாராட்டினர்.

இந்த சிறப்பான நிகழ்வில் மகா சங்கத்தினர், புகழ்பெற்ற அழைப்பாளர்கள் மற்றும் அப்பகுதியில் பக்தர்கள் கலந்து கொண்டனர்.