கொழும்பு பாதுகாப்பு சேவைகள் கல்லூரிக்கு பாதுகாப்பு செயலாளர் விஜயம்

பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) கொழும்பு பாதுகாப்பு சேவைகள் கல்லூரிக்கு 2021 ஏப்ரல் 05 ஆம் திகதி விஜயம் செய்தார். இந்நிகழ்வில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவும் கலந்து கொண்டார்.

பாதுகாப்புச் செயலாளரின் இந்த விஜயத்தின் மேற்படி கல்லூரியின் கணிஷ்ட பிரிவு செயற்பாட்டு அறைகள், தங்குமிடம் மற்றும் ஆரம்ப பிரிவு உப அதிபர் அலுவலகம் என்பவற்றை மேற்பார்வை செய்தார். இங்கு நிர்மானிக்கப்பட்டுவரும் கல்லூரியின் விடுதி நிர்மாண பணிகளின் முன்னேற்றம் குறித்து கேட்டறிந்து கொண்ட அவர், இந்த திட்டத்தை விரைவாக முடிப்பதற்கு தேவையான அறிவுறுத்தல்களையும் வழங்கினார்.

இந் நிகழ்வுக்காக பாதுகாப்புப் படைகளின் பிரதம அதிகாரி மற்றும் இலங்கை இராணுவத் தளபதி, இலங்கை விமானப்படைத் தளபதி, கல்லூரியின் பணிப்பாளர், கல்லூரி அதிபர் மற்றும் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.